பக்கம்:அரை மனிதன்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா.சீனிவாசன்

85



அங்கே பலரும் ஒருவரை ஒருவர் ஒதுக்கி வாழ்வதைப் பார்த்திருக்கிறான். அப்பாவும் மகளும் நெருங்கிப் பழகிப் பார்த்தது இல்லை. அம்மாவும் மகளும் ரொம்ப தூரத்தில் இருந்தார்கள். எப்பொழுதும் கும்மாளம் சிரிப்பு. வேளைக்கு ஒரு உடை. நேரத்துக்கு ஒரு உணவு, காரங்கள் அங்கே பல. ஏன் பலகாரம் என்ற பெயர் அமைந்தது என்று அங்குதான் தெரிந்து கொள்ள முடிந்தது. பசி என்றால் அதன் அர்த்தத்தை அகராதி கொண்டுதான் பார்க்க முடிந்தது. ஆளைக் கொண்டு பார்க்க முடியாது.

'வரி ஏய்ப்பு' என்பது அவர்கள் வட்டாரத்தில் பழகும் பேச்சாக இருந்தது. அது பழகிவிட்ட தொழில். எதையும் அவர்கள் விலைக்கு வாங்கும் சக்தி இருந்தது. சட்டத்தை வக்கீலை கொண்டு விலைக்கு வாங்கினார்கள். வைத்தியனை விலைக் கொடுத்து வாங்கினார்கள். யாரையும் எதையும் வளைத்துக் கொள்ளும் திறமை இருந்தது. லஞ்சம் கொடுப்பதற்கும் பின்வாங்க மாட்டார்கள். அரசியல் தலைவர்களை அம்மாகண்ணுகளாக ஆக்குவது அவர்களே. பெரிய காண்டிராக்ட் எடுத்து நடத்துவார்கள். அதற்காக அப்பாவி அமைச்சர்களை விலை பேசி அவர்களை இறுக்கி வைத்து விடுகிறார்கள்.

மக்கள் பிரதிநிதிகளாக வரும் எம்.எல்.ஏக்கள் அவர்கள் தரும் பாராட்டுகளுக்கு எளிதில் இரையாகி விடுகிறார்கள். தேர்தல் என்றால் அவர்கள்தான் பணம் உதவுகிறார்கள். அவர்கள் பணத்தைக் கொண்டுதான் ஏழைகளின் வாக்குகளை விலை பேசி வாங்குகிறார்கள். அரசியல் தலைவர்கள் மக்களிடம் சமுதாய சம உடைமைக் கருத்துக்களைச் சொல்லி வாக்கு கேட்கிறார்கள். அவர்கள் அதற்குப் பயன்படுத்தப்படும் பணம் இந்த மேல் மட்டத்திலிருந்து வருகிறது. அந்த லட்சியத்தையே இந்தப் பணம் கொண்டு விலைக்கு வாங்கி விட்ட பிறகு அவர்கள் எப்படிச் செயலாற்ற முடியும்?

தரையில் கால் படிய வேண்டிய தேவை ஏற்பட்டதில்லை. செருப்பு இடை நின்று தடுக்கிறது. அது மட்டும் ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/87&oldid=1461984" இலிருந்து மீள்விக்கப்பட்டது