பக்கம்:அரை மனிதன்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

அரை மனிதன்



"அவனை ஒப்புக் கொள்ள நான் விடமாட்டேன். அதனால் அவனுக்கு நன்மை இல்லை. நான் காலில்லாத நொண்டி. நான் இங்கு இருந்து சாதிக்கப் போவது என்ன? நியாயமாக நொண்டி இருக்க வேண்டிய இடம் சிறைதான். அவனால்தான் எங்கேயும் அசையாமல் இருக்க முடியும்."

அதற்குள் நாங்கள் லாக்கப்பை நெருங்கி விட்டோம். ரங்கனும் உடன் வந்தான். அவனைக் கண்டால் போலீசுக்கே ஒரு மரியாதை, அவனிடம் அவர்களுக்கு நெருங்கிய பழக்கம்.

லாக்கப்பில் தனியாக என்னைச் சந்திக்க ரங்கனை அனுமதித்தார்கள்.

"எனக்கு ஒரே கவலை"

"என்னண்ணே என்னால் முடிந்தவரை செய்யாமல் இருப்பேனா"

"அம்மாகண்ணுதான். அவள் மறுபடியும் லாட்ஜீகளுக்குப் போகக் கூடாது. அவளை நிராதரமாக விட்டுவிட்டுப் போகிறேன். அதுதான் எனக்கே கவலையாக இருக்கிறது."

"அதெல்லாம் நீ ஒண்ணும் உள்ளே போக மாட்டே நான் பார்த்துக்கிறேன்."

"வக்கீல் வைத்து ஆடினாப் போச்சு. உண்மையிலே நீ திருடி இருக்க முடியாது”

"சொத்து என் கையில் தானே இருக்கிறது. இருந்தது.”

"அது யார் உன் கையிலே கொடுத்தது"

"அம்மாகண்ணு"

"அவள் கையிலே யார் கொடுத்தது?"

"அதுதான் சொல்லக் கூடாது. சொல்ல முடியாது”

"அவள் யார் கொடுத்ததாகச் சொன்னாள்"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/98&oldid=1461995" இலிருந்து மீள்விக்கப்பட்டது