பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/132

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


I U 5. பயனை அடையும் வழிகள் களைவாய் துன்பம்; களையாது ஒழிவாய், களைகண் மற்றிலேன் (திருவாய். 5-8:5) என்று உபாயத்தில் அனைத்தையும் அவனிடம் விட்டு வாளா இருத்தல் என்பதாகும். (5) ஆசாரிய அபிமானம் : மேலே கூறிய நான்கு உபாயங்களிலும் ஒன்றையும் செய்வதற்கு ஆற்றலில்லாத ஒருவனைக் கடைத்தேற்றுவது ஆசாரிய அபிமானம் என்பது. இச் சேதநனைக் குறித்து ஆசாரியன் இவன் ஈசுவரனை இழந்திருத்தலாலும், இவனைப் பெற்றால் ஈசுவரனுக்கு விளையும் பிரீதியையும் திருவுள்ளத்தில் கொண்டு ஒரு தாய்போல் உதவுபவன் ஆசாரியன். முலை யுண்ணும் சிசுவுக்கு நோய் உண்டானால் அது தான் பத்தியம் காக்காமையினால் வந்தது என்று கருதி தாய் மருந்துண்ணுகின்றாள். அதுபோலவே, ஆசாரியனும் உபாய அநுட்டானம் பண்ணிக் காக்கவல்ல பரம தயாளு வான மகா பாகவதன் அபிமானத்திலே ஒதுங்கிச் செய்ய வேண்டிய எல்லாவற்றையும், தவிர்க்க வேண்டிய எல்லா வற்றையும் அவன் இட்ட வழக்காகக் கொள்வான். திருவாய்மொழி திருவாய்மொழியில் நோற்ற நோன்பும் (5,7), ஆரா அமுதே' (5,8), மானேய் நோக்கு (5,9), 'பிறந்த வாறும் (5,10) என்ற நான்கு திருப்பதிகங்களும் பயனை அடையும் வழிகளைக் (உபாயங்களைக்) கூறுவனவாக அமைகின்றன. (1) வானமாமலைப் பெருமானது அருளை வேண்டல். இது நோற்ற நோன்பும் (5,7) என்ற திருவாய்