பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 அர்த்த பஞ்சகம் களின் காலிலும் விழுந்து இரக்கின்றனர் ஆயச் சிறுமிகள். நப்பினைப் பிராட்டி கோபியர் மீது இரக்கம் கொண்டு (சாதிப்பற்று காரணமோ?) கதவைத் திறக்கப்புக, அதனைக் கண்ணபிரான் இவர்கள், உம்பர்கோமானே, உறங்காதெழுந்திராய் (17) என்று என்னையன்றோ முதலில் எழுப்பினார்கள்? நாமன்றோ முதலில் இவர் கட்குக் காரியம் செய்யவேண்டும்? இவள் முற்படுவது சரியன்று' என்று அவளை எழுந்திருக்க வொட்டாமல் தகைந்து தான் எழுந்திருக்கத் தொடங்கினான். அவள் கண்ணனை நோக்கி, 'பிரானே! நீ வீண் சண்டைக்கு வருவது நியாயமன்று; உன்னை எழுப்பின உடனே நீ எழுந்து காரியம் செய்யத் தொடங்கியிருந்தால் அது தகுதியுடையதாயிருக்கும்; அப்போது நீ வாளா கிடந்தாய்; இப்போது 'நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்... கடைதிறவாய் (18) என்று என்னை எழுப்பினபோது 'நான் எழுந்து திறக்க முற்படும்போது நீ என்னைத் தடுப்பது தகுதியன்று' என்றாள். அதற்குக் கண்ணபிரான் 'நீ சாத்திரப் பொருள் உணராமல் வீண் வழக்குத் தொடர்வது தகாது; எப்போதும் உனக்குப் புருஷகாரச் செயலில் சம்பந்தமேயன்றி, காரியம் செய்வதில் எனக்குத் தான் உரிமையுள்ளது; உனக்கு இல்லை என்றான். அதற்குப் பின்னைப் பிராட்டி, வீடுபேறு நல்குவதாகின்ற பெரிய காரியத்தில் எனக்குத் தகுதி இல்லையாயினும், கதவைத் திறப்பதாகிற இச்சிறு செயலில் கூடவா எனக்குத் தகுதி இல்லை? வீண் வம்புப் பேச்சு பேசாதே; என்னை அழைத்தவர்கட்கு நான்தான் திறப்பேன்’ என்று சொல்லி வன்மையாக எழுந்திருக்கப் புக்காள். 'என் அடியார்க்கு நான்தான் காரியஞ்செய்வேன்' என்று சொல்லி அவளைத் தகைகின்றான் கண்ணபிரான். இங்ங்னம் அறைக்குள்ளே சிறுபோர் நிகழ்த்திக்கொண்டிருக்கும் காட்சியை ஆயச் சிறுமியக் கதவுத் தொளையின் வழியே காண்கின்றனர்.