பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அர்த்த பஞ்சகம் 7 பொல்லா ஒழுக்கும் அழுக்குடம்பும் (திரு.விருத். 1) ஆகிய இவையே விரோதிகள்; ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்வதுவே பரம புருஷார்த்தம் என்னும் இவ்வைந்து பொருள்களுமே திருவாய்மொழியில் சொல்லப் பெறுகின்றன. 1. நம்முடைய ஆசாரியப் பெருமக்கள் இறைவனின் இயல்பு திருவாய்மொழியிலுள்ள உயர்வற' (1.1) 'திண்ணன் வீடு' (2.2) அணைவது' (2.8) ஒன்றும் தேவும் (4.10) ஆகிய நான்கு திருப்பதிகங்களிலும் நுவல்வதாகச் சுட்டிப் போயினர். 2. ஆன்மாவின் இயல்பு திருவாய்மொழியிலுள்ள 'பயிலும் சுடர் ஒளி (7.3), ஏறாளும் இறையோனும்' (4.8), கண்கள் சிவந்து (8.8), கருமாணிக்கம் (8.9) என்ற நான்கு திருப்பதிகங்களிலும் சொல்லப் பெற்றுள்ள தாகக் குறித்துப் போயினர். 3. ஆன்மா அடையும் பலன் திருவாய்மொழியி லுள்ள எம்மாவீடு (2.9), ஒழிவில் காலம்எல்லாம் (3.8) "நெடுமாற்கு அடிமை (8.10), வேய் மரு' (10-3) என்ற நான்கு திருப்பதிகங்களிலும் சொல்லப்பெற்றுள்ளதாக எடுத்துக் காட்டியுள்ளனர். 4. பயனை அடையதற்குத் தடையாக உள்ளவைகள் திருவாய்மொழியிலுள்ள விடு மின் முற்றவும் (1.2) சொன்னால் விரோதம் இது (3.9), ஒரு நாயகமாய்” ..(4.1), கொண்ட பெண்டிர் (9.1) என்ற நான்கு திருப்பதி கங்களிலும் நுவலப் பெற்றுள்ளனவாக மொழிந்து சென்றனர். 5. பயனை அடையும் வழிகள் திருவாய்மொழியி ஆலுள்ள நோற்ற நோன்பும் (5.7) ஆரா அமுதே' (5.8)