பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


34 அர்த்த பஞ்சகம் உபாசிக்கத் தக்கவை. இன்னும் பல கருத்துகள் அவதார இரகசியங்களாகவே உள்ளன. இவ்வவதாரங்கள் யாவும், சேதநர்கள் உய்யும் பொருட்டு ஈசுவரனின் இச்சை காரண மாக ஏற்பட்டவை. ஆகவே, நம்மாழ்வார் இறைவனைக் குறிப்பிடமிடத்து பிறப்புஇல் பல்பிறவிப் பெருமான்' என்றும், திருமங்கையாழ்வார் பிறப்பிலி' என்றும் பேசு வர். இவ்வவதாரங்களின் பலன் அடைந்தாரைக் காத்த லும், அவர்களின் விரோதிகளைப் போக்குதல், வைதிக தர்மத்தை நிலை நிறுத்துதலும் ஆகும்." r இந்த அவதாரங்கள் யாவும் ஆழ்வார் பாசுரங்களில் குறிப்பிடப்பெறுகின்றன. இவற்றுள் இராம கிருஷ்ண அவதாரங்கள் அதிகமாகவும், வாமனம், நரசிம்மம், வரா கம் முதலியவை அவற்றுக்கு அடுத்துக் குறைவாகவும் குறிப்பிடப் பெற்றுள்ளன. முன்னவை மக்களிடையே தோன்றி அதிகக் கால அளவு பழகினமையே இதற்குக் காரணமாகக் கொள்ளலாம். இதன் காரணமாக இறை வனின் மங்கள குணங்களை மக்கள் அநுபவிப்பதற்கு வாய்ப்புகள் மிக்கு இருந்தன. ஆகவே, ஆழ்வார்களும் அவற்றில் அதிகமாக ஈடுபட்டுப் பேசுகின்றனர். 4. அந்தர்யாமித்துவம் : சேதநர்களின் உள்ளே புக்கிருந்து எல்லாச் செயல்கட்கும் தான் ஏவுபவனாக இருப்பதோடன்றி, அவர்கட்குத் தியான ருசி பிறந்த போது தியானத்திற்கு உரியவனாதற்காகவும் அவர்களைக் காப்பதற்காகவும் அழகே வடிவெடுத்தாற் போன்ற மங் 5. திருவாய் 2.9:5 6. பெரி. திரு. 3.7:8 7. கீதை. 4:8 8. ருசி - பாவச் செயல்களையோ புண் ணியச் செயல் களையோ அறிந்தே செய்வதற்குக் காரணமாயுள்ள சுவை.