பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/72

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஈசுவரனின் இயல்பு 43 ۹- هم என்பது எம் பெருமானது திருக்கல்யாண குணங்களைச் சொல்லுவது. அவை பிரித்து எண்ணக் கூடியதல்லவை யாகையாலே கடல் போன்றவையாம். எம்பெருமானையே சர்வ போக்கியமுமாகக் கொள்ள வேண்டும் என்பது இதன் உள்ளுறைப் பொருள். "ஓங்கி உலகலந்த (3) என்ற மூன்றாம் பாசுரத்தில் வாமனனாகித் திரிவிக்கிரமனான விபவ ரூபத்தைக் குறிப் பிடும் போக்கில், ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி என்று குறிப்பிடுகின்றார். 'உத்தமன் பேர்’ என்பதால் 'நாராயணன்' என்ற பரத்துவ நினைவும் வியூகத்தில் சொல்லும் உடையவர்களாக விபவத்தைப் பாடி, பக வானை மனத்தில் எப்படிப் பாவித்துக் கொண்டுள் ளோமோ அந்தப் பாவைக்குச் சாற்றி நீராடல் வேண்டும் என்று மனம் மொழி செயல்களால் இது பகவானுடைய ஆராதனமே என்பதைத் தெளிவு படுத்துகின்றாள். 'ஆழிமழைக் கண்ணா!' (4) என்ற நான்காம் பாசுரத் தில் 'ஆழி மழைக் கண்ணா!' என்று அவன் மேற்கொண்ட காரியத்தை இட்டு அழைக்கின்றனர். 'எம்பெருமான் படைப்புச் செயல்களை அயனார் தலையிலிட்டுத் தான் காத்தல் தொழிலைக் கைப்பற்றினாற் போல பிடி, அடி' என்னும் செயலை நமன் முதலியோர் தலையிலிட்டு, உனது நீர்மைக்குப் பொருந்த எல்லாரையும் குளிர நோக் கும் காரியத்தில் நியமிக்கப் பட்டவனன்றோ நீ' என்று புகழ்கின்றாள். 'பகவானுக்கு அடிமைப் பட்ட பாகவதர்கட்கு மற்றைத் தேவர்கள் அடிமை செய்பவர்கள்’ என்பது சாத் திர சித்தம். ஆகவே, மழைக்கு அதிதெய்வமான வருணன், பரமபாகவதைகளான இவர்கள் இருக்கும் இடத்தில் வந்து 'நான் இவ்விடத்தில் செய்ய வேண்டும் அடிமையை