பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/84

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆன்மாவின் இயல்பு 55 குலங்களைத் தரித்திருக்கின்ற நான்கு சாதிகளிலும் கீழே கீழே சென்று மிகச் சிறிய நன்மையும் கூட இல்லாத சண்டாளர்களாகிலும், வலது கையில் தரித்திருக்கின்ற சக்கரத்தையுடைய பெருமையிற் சிறந்தவனான நீலமணி போன்ற நிறத்தையுடைய எம்பெருமானுக்கு அடிமை என்று நினைத்து வேறு பயனைக் கருதாதவர்களுடைய அடியார் அவர்தம் அடியார் எமக்குக் கடவுள் ஆவர் (9) திருவடிகளுக்கு அளவான பூமியை உண்டு உண்ட உணவுக்கு அதுகுணமாகக் காரியத்தைச் செய்த ஒப்பு ஒன்றும் இல்லாத இளமை பொருந்திய திருமேனியை யுடைய எந்தை பிரானுக்கு அடியார் அடியார் தம்மடியார் அடியார் தமக்கு அடியார் அடியார்தம் அடியார்கட்கு அடியோம் யாம் என்கிறார் (10) இப் பாசுரங்களில் ஆன்மாவின் பாகவத சேஷத்துவம்அடியார்க்கு அடிமை-என்ற கருத்து தெளிவாக்கப் பெறுகின்றது. (2) எம் பெருமான் விரும்பாதவைகளால் த ம க் கு ப் பயன் இல்லை என்று தலைவி கூற்றாகப் பேசுதல் : இஃது. 'ஏறு ஆளும்' (4.8) என்ற திருவாய்மொழித் திருப்பதிகத் தில் விளக்கப்பெறுகின்றது. அவனுக்கு வேண்டாத நானும் என் உடைமைமையும் வேண்டா எனக்கு' என்று ஆன்மாவிலும் ஆன்மாவோடு சம்பந்தப்பட்ட பொருள் களிலும் நசை அற்றபடியை அத்யாபதேசத்தால் அருளிச் செய்கின்றார். இடப் வாகனத்தையுடைய சிவபிரானும் நான்கு முகங்களையுடைய பிரமனும் திருமகளும் தனித்தனியே 1. அந்யாபதேசம் - மாற்றிச் சொல்லுதல்; வேறு வகையில் பேசுதல்.