பக்கம்:அறநிலையங்கள், சொற்பொழிவு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

அறநிலையங்கள்

என்றார். இது பட்டினத்தார் பாசுரம். யாராவது துறவிகளைத் தேடிவந்து உணவு கொண்டு வந்தால் தான் துறவிகள் உண்ணவேண்டும். இதுதான் துறவிகளின் பண்பு. இப்படியிருக்கத் துறவறத்தை மேவும் திருவாவடுதுறை மடாதிபதிகளுக்கு, நஞ்சையும், புஞ்சையும் ஏன்?

ஓர் அரசனுக்குத் தம்பியாக இருந்தும், அரச பாரத்தைத் தாங்காமல், சேரன் செங்குட்டுவனின் தம்பி உண்மைத் துறவியாக இருந்து, சீரிய சிலப்பதிகாரத்தை இயற்றவில்லையா?

திருவாவடுதுறை தம்பிரானுக்குப் பத்து விரலிலும் மின்னும் வைரமோதிரம் ஏன்? கையில் கமண்டலம் ஏன்? காதில் குண்டலமேன்? குண்டலத்தின் நடுவே தங்கம் ஜொலிப்பதேன்? நெஞ்சிலே வஞ்சகம் ஏன்? பக்கத்திலே பாடும் குயில்கள் என்? ஆடும் மயில்கள் என்? இதுவா துறவறம்?

"பசித்தால் புசி" என்றுதானே. துறவிகளுக்குச் சொல்லப்பட்டிருக்கிறது? பசித்தால் புசி என்றால் என்ன? காயேனும், செங்கனியேனும், கந்தமூலமேனும், உதிர் சருகேனும் பசிக்குத் துறவிகள் உட்கொள்ளலாம் என்று தானே சொல்லப்பட்டிருக்கிறது? மணி முடி துறந்து, அரகை உதறித்தள்ளி, நடுநிசியிலே குழந்தையையும், ஆசைக்கினிய மனைவியையும் பிரிந்து, கபில வஸ்துவை விட்டு, புத்தர் துறவுகொண்டார் என்றால், அதலே அர்த்தமிருக்கிறது. சமணர்கள் துறவு கொண்டார்கள் என்றால் அர்த்தமிருக்கிறது. ஆனால், மனித உருவிலே தோன்றி, மக்களை ஏய்த்து வாழுவதற்காகத் துறவு பூண்டவர்களை நாம் எப்படி உண்மைத் துறவிகளாக ஏற்க முடியும்?