பக்கம்:அறநிலையங்கள், சொற்பொழிவு.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறிஞர் அண்ணாதுரை

9

ஆதரவு தராமல் இருந்தும், கல்கி, சுதேசமித்திரன், ஹிந்து ஆகியவைகள் ஆதரவு தருகிறது.

எங்களைத் தேசத் துரோகிகள் என்று முன்பு காங்கிரஸ்காரர்கள் சொன்னார்கள். நாங்களோ, காங்கிரஸ்காரர்கள் கொண்டு வந்த இந்த மசோதாவை ஆதரிக்கிறோம். ஆனால், சில காங்கிரஸ்காரர்கள் இதை எதிர்க்கிறார்களே! இவர்களைத் தேசத்துரோகிகள் என்று நீங்கள் சொல்லமாட்டீர்கள்? ஒரு கட்சியின் கண்ணியும் கட்டுப்பாடு, இவற்றை இவர்கள் கொண்டிருக்கிறர்களில்லை. அப்படியிருக்க, இவர்கள் பேச்சைக் காங்கிரஸ்காரர்களில் பலர் கேட்கத்தான் செய்கிறார்கள்.

வரதாச்சாரியையும் - வைத்தியநாத அய்யரையும் கட்சியிலிருந்து விலக்க முடிந்ததா? முடிகிறதா? முடியுமா?

இந்த மசோதா சட்டமாக்கப்பட்டு விட்டால், மடங்களெல்லாம் சீர்திருத்தப்படுமே என்று இவர்கள் அஞ்சுகிறார்கள். மாற்றுக் கட்சியாராகிய நாங்கள் மந்திரி சபையினரால் சிறையிலே தள்ளப்படுபவர்கள். நாங்கள் சிறையிலே இருந்த நேரம் போக மிகுதியிருக்கும். நேரங்களில் இம்மசோதாவை ஆதரித்துப்பேசி, மந்திரி சபைக்கே செலவழிக்கிறோம். பல விஷயங்களில் எங்களுக்கும் அவர்களுக்கும் நகராறு; அப்படியிருந்தும் அவர்கள் கொண்டுவரும் மசோதாவை நாங்கள் ஆதரிக்கிறோம். எந்தக் கட்சி அரசியலிலும் சரி, அகில இந்தியாவிலும் சரி, அகில உலகத்திலும் சரி, இந்த அற்புதம் நடக்கவே நடக்காது.

காங்கிரஸ் கட்சி, எதிர்க் கட்சியின் லேபிலைச் போட்டுக்கொண்டு காட்சி அளிக்கமுடியாது. திராவிடக்