பக்கம்:அறநிலையங்கள், சொற்பொழிவு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

அறநிலையங்கள்

பெருங்காயம் வாங்கும் செட்டியார் கடையிலேயே கருவேப்பிலையும் கேட்டால், இல்லையென்றுதான் சொல்லுவார். கருவேப்பிலைக்குக் கொத்தவால்சாவடியின் உள்ளே சென்றுதான் கருவேப்பிலை வாங்கவேண்டும். அதைப் போல, எல்லா விஷயங்களையும் ஒரு கட்சியிலிருந்தே பெற்றுவிட முடியாது.

பெருங்காயம் - கருவேப்பிலை முதலியவைகளைக் கொண்டு சாம்பார் செய்ய, முக்கியமாகப் பருப்பு வேண்டும். நாம் வாங்கும் பருப்பும் வேகிற பருப்பாக வாங்க வேண்டும். அதுவும், கொஞ்சம் வாங்கி வேகவைத்துப் பார்த்து, நன்றாக வேகிறது என்று அறிந்த பின்னர்த்தான் வாங்கவேண்டும். வாழ்க்கையிலே சமையலுக்காகப் பருப்பு வாங்கவும் பதார்த்தம் வாங்கவும் கலை தேவையா யிருக்கிறது. வாழ்க்கைச் சந்தையிலே நீங்கள் இன்னும் எவ்வளவு கலைவளம் பெறவேண்டுமென்பதைச் சிந்தனை செய்து பாருங்கள். வாழ்க்கைச் சந்தைக்கு வேண்டிய பல விஷயங்களையும், ஒரு கட்சியிலிருந்தே பெற்றுவிட முடியாது. ஒவ்வொரு கட்சியிலிருந்தும் சில கொள்கைகளை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

வியாபாரிகளாகிய நீங்கள், மக்களை எடைபோட்டு, அவர்களுக்கு வேண்டிய சரக்கைப் பரிசீலனை செய்துதான் வாங்குகிறீர்கள். இப்பொழுது இருக்கும் சட்டசபையில் முன்பிருந்ததைப்போல எதிர்க்கட்சியில்லை. பெருவாரியான காங்கிரஸ்காரர்களைக் கொண்டு; இன்றையத்தினம் சட்டசபை நடக்கிறது. பெருவாரியான காங்கிரஸ்காரர்களின் ஆதரவின் பேரில் கொண்டுவரும் இம்மசோதாவைப் பற்றிக் கருத்து வேற்றுமை இருக்க நியாயமில்லை எனினும், சில கதர்ச்சட்டைக்காரர்கள் இதை எதிர்க்கிறார்கள். இவர்களுக்கு மக்களில் பெரும்பாலோர்