பக்கம்:அறநூல் தந்த அறிவாளர்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அறநூல் தந்த அறிவாளர்

1. அருந்தமிழ் அறநூல்கள்

சங்க நூல்கள்

அமிழ்தினும் இனிய நம் தமிழ்மொழியில் உயர்ந்த நூல்கள் பல உள்ளன. அவற்றுள் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட நூல்களும் இருக்கின்றன. அத்தகைய பழமையான நூல்களைச் 'சங்க நூல்கள்' என்று சாற்றுவர். தமிழை வளர்ப்பதற்குப் பாண்டிய மன்னர்கள் சங்கம் அமைத்தார்கள். தலைச் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் என்று மூன்று சங்கங்கள் தோன்றின. அச்சங்கங்களில் தமிழ்ப் புலவர்கள் பலர் கூடியிருந்து தமிழை ஆராய்ந்தனர். அவர்களால் பல நூல்கள் ஆக்கப் பெற்றன. அவற்றையே “சங்க நூல்கள்' என்று அறிஞர்கள் கூறுவர்.

மேற்கணக்கும் கீழ்க்கணக்கும்

சங்க நூல்களில் முப்பத்தாறு நூல்களைச் சிறந்தவை என்று அறிஞர்கள் குறிப்பிடுவர்.