பக்கம்:அறநூல் தந்த அறிவாளர்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

அறநூல் தந்த அறிவாளர்


அவை பதினெண் மேற்கணக்கு நூல்கள் என்றும், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என்றும் கூறப்படும். எட்டுத் தொகையும் பத்துப்பாட்டும் பதினெண் மேற்கணக்கு நூல்கள் ஆகும். திருக்குறள் முதலான பதினெண் நூல்களைப் பதினெண் கீழ்க்கணக்கு நாங்கள் என்பர். கீழ்க்கணக்கு நூல்கள் எல்லாம் இரண்டு அடி முதல் ஏழடி வரையுள்ள சிறிய பாக்களால் ஆக்கப்பெற்றவை. அதனாலேயே கீழ்க்கணக்கு நூல்கள் என்று பெயர் பெற்றன. இவற்றுள் பெரும்பாலான நூல்கள் அறத்தையே விரித்துரைப்பன ஆகும்

‘நாலடி நான்மணி நானாற்ப(து) ஐந்திணைமுப்
பால்கடுகம் கோவை பழமொழி--மாமூலம்
இன்னிலை காஞ்சியோ(டு) ஏலாதி என்பவே
கைக்கிலைய வாங்கீழ்க் கணக்கு’

இவ்வெண்பாவால் கீழ்க்கணக்கு நூல்கள் பதினெட்டு எவை என்பதை அறியலாம்.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, இனியவை நாற்பது, இன்னாநாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி