பக்கம்:அறநெறி.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IOC அறநெறி

வர்கள் நெஞ்சில் ஈரக்கசிவு ஏற்பட வேண்டும் என்று விரும்பினார். அவர்கள் உள்ளத்தில் தங்களைச் சுற்றி யுள்ள மக்களிற் பெரும்பகுதியினர் உண்ண உணவின்றி வாடி மெலிகிறார்களே என்ற வருத்த உணர்ச்சி மேலிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

எனவே புதிய பாரதம் பொருள் மிக்கோர், பொருள் அற்றோர் எனும் இரு நிலைகளில் ஆபத்தான ஒரு சூழ்நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கக் கூடாது என்று வற்புறுத்தினார்.

எனவேதான் பிறர் நிலையைக் கண்டு உளம் உருகும் அன்பு நிலையே அது முதிர்ந்த அருள்நிலையே நாட்டுப் பற்றின் முதற்படியாக அமையும் என உறுதியாக உரைத்தார். அன்பின் வழியது உயிர்நிலை என்னும் வள்ளுவர் வாக்கிற்கு விளக்கம் கூறிய விவேகியாக விவேகானந்தர் துலங்குகின்றார்.

III

விவேகானந்தர் முற்றுந் துறந்த ஒரு துறவியாக வாழ்ந்தளரானாலும் அவர்தம் சமுதாயப்பற்று கங்குகரை யற்றதாகும். பகவான் இராமகிருட்டிண பரமஹம்சர் அவரைத் தம் பிள்ளைப்போலவே பாவித்து நடத்தினார். அவரைச் சில நாட்கள் பார்க்கவில்லையென்றாலுங்கூடக் கவலை கொண்டார். கன்றைக் கண்ட தாய்ப்பக போல இராமகிருட்டிணர் உளம் கரைந்தார். அந்த அளவிற்கு இராமகிருட்டிணரின் அன்பைப் பெற்றிருந்த விவேகானந்தர் உலகம் நன்கறிந்த உண்மைத் காவி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/108&oldid=586845" இலிருந்து மீள்விக்கப்பட்டது