பக்கம்:அறநெறி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6o.coበየ፡ 43

துன்பக் காலத்து நமக்கு உதவிய ஒருவனுக்கு அவன் துன்பப்படுங்காலையில் உதவவில்லை எனில் அது அவன் பரம்பரைக்கும் ஆகாது என முழங்கும் கற்றறிந்தார் ஏத்தும் கலி’.

ஒற்கத்துள் உதவியார்க்கு உதவாதான் மற்றவன் எச்சத்து ளாயினும. தெறியாது விடாதேகாண்

-கலி, 149:6-7 கவிச்சக்கரவர்த்தி கம்பநாடரும் செய்ந்நன்றியறி தலின் திறத்தினைப் பின்வரும் பாடலில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

சிதைவகல் காதல் தாயைத் தந்தையைக் குருவைத் தெய்வப் பதவிஅக் தணரை ஆவை பாலரை பாவை மாரை வதைபுரி குநர்க்கும் உண்டாம் மாற்றலாம் ஆற்றல் மாயா உதவிகொன் றார்க்குஒன் றானும் ஒழிக்கலாம் உபாயம்

உண்டோ -கம்ப; கிட்கிந்தை. 62 இதனையே இளங்கோவடிகள், செய்ங்கன்றி கொல்லன்மின்

-சிலம்; 30:191 என்றார்.

உலக மகாகவி ஷேக்ஸ்பியரும் நீ விரும்பியவாறே” (As you like it) grairgor'h spiri-&#36),

Blow, blow thou winter wind Thou art not so unkind as man’s ingratitude

என்று குறிப்பிடுவது காணலாம்

சுழன்றடி சுழன்றடி குளிர்காலக் காற்றே மனிதரின் செய்ங்கன்றி மறத்தல் போல் நீ அன்பற்று வீசவில்லை

என்பது செய்ந்நன்றியறிதலின் சிறப்பைப் புலப்படுத்தும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/45&oldid=586922" இலிருந்து மீள்விக்கப்பட்டது