பக்கம்:அறநெறி.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Թ.tմՈ՛, 47

,ாக அவருடைய குணங்களையெல்லாம் பாராட்டாது விடுவதும் அறத்தின்பாற்பட்ட செயல்களாகா என்பது சங்ககாலச் சான்றோர் மதுரை மருதன் இளநாகனார் கருத்தாகும்.

தீய வழியில் ஈட்டி, நல்ல அறச்செயல்களுக்குப் பணத்தைச் செலவிடலாம் என்பது சிலருடைய கருத்து. அக்கருத்தினைக் கலித்தொகை வன்மையாக மறுக்கின்றது. நடுவுநிலைமையினின்றும் நீங்கித் தகாத வழியில்திரட்டிய பொருள் இந்த பிறவியில் மட்டுமின்றி மறுபிறவியிலும் பகையாகும் என்கிறது அந்நூல்.

செம்மையின் இகந்தொழிஇப் பொருள் செய்வார்க்கு

அப்பொருள் இம்மையும் மறுமையும் பகையாவது அறியாயோ

(-கலி; 4:14-15)

எனவே பாரதி கூறியபடி நல்லவே எண்ண வேண்டும்; திண்ணிய நெஞ்சம் வேண்டும்; தெளிந்த நல்லறிவு வேண்டும். எனவே எவ்வளவுதான் நன்மையைப் பயப்ப தாக இருந்தாலும், நடுவுநிலைமையினின்றும் நீங்கியமை யால் வரும் ஆக்கத்தினை அந்தக் கணத்திலேயே நீக்கி விடுதல் நலம பயப்பதாம் என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/49&oldid=586928" இருந்து மீள்விக்கப்பட்டது