பக்கம்:அறநெறி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

gì rưm. . 53

என்றார் திருவள்ளுவர். முற்றத் துறந்த முனிவர்களாலும் சினத்தை அடக்குதல் கடினம் என்றால் அந்தச் சினத்தால் வரும் தீங்குகள் மிகப் பலாைம். எனவேதான் திருவள்ளுவர் ‘வெகுளியை யார்மாட்டும்மறக்க என்றும். சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம் என்னும் ஏமப் புணையைச் சுடும்” என்றும் சொன்னார்.

“ஆறுவது சினம்’ என்பது ஆத்திசூடி. திராக் கோபம் போராய் முடியும் என்பது கொன்றைவேந்தன், உலகநீதி என்னும் நீதி நூல், சினந்தேடி அல்லலையும் தேட வேண்டாம் என்று புகல்கிறது.

உலக மக்கள் அனைவரும் இறைவன் படைப்பு என்றும், எந்தவொரு மனிதருக்கும் ஒவ்வொரு செயல் எளிது என்றும் அறிஞர் உரைப்பர். எனவே மனிதர் அன்னவரும் சமம் எனக்கொண்டு ஒவ்வொருவரிடத்தும் அன்பும் மதிப்பும் செலுத்தி வாழுவதே ஒருவருடைய கடமையாக இருக்கவேண்டும். ஆறறிவுடைய மக்களை மட்டுமன்றி, ஆறறிவுக்கும் குறைவுபட்ட உயிரினங்களிடத் திலும் அன்புசெலுத்தி வாழ்ந்த இனம் தமிழினம் எனப் பழந்தமிழ் இலக்கியங்கள் பறைசாற்றும். எனவே மரியாதை தந்து மரியாதை பெறுதல் என்றபடி வாழ்வு அமைய வேண்டுமேயானால் முதற்கண் கோபம் என்ற கொடிய பண்பினை அடியோடு விட்டொழிக்க வேண்டும். “உள்ளம் கவர்ந்து எழுந்து ஒங்கு சினம்’ என்று அறம் உரைக்க வந்த புலவர் ஒருவர் சினத்தை வருணிக்கிறார். அத்தகைய சினத்தை அடக்கிக் காத்துக் கொள்ளுகின்ற குணத்தையே குணம் என்று நம் பெரியவர்கள் கொண்டனர்.

உலகில் இரு வகையினர் உள்ளனர். ஒரு வகையினர், பிறரை மதித்து நட்க்கின்றனர்; மற்றொரு வகையினர்

ஆ.-4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/55&oldid=586938" இலிருந்து மீள்விக்கப்பட்டது