பக்கம்:அறநெறி.pdf/79

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፴.” {ጥ”. - 77

வேலையுடைய குமண வள்ளல் நல்கிய செல்வத்தை உன்னை விரும்பி வாழும் நின் சார்பினராகிய பெண் களுக்கும், உன்னால் அன்பு செலுத்தப்பட்டு வாழுகின்ற பெண்களுக்கும், பல்வகையாலும் பெருமைகள் நிறைந் திலங்கும் கற்பினையுடைய உனது உறவினர்களான மூத்த பெண்களுக்கும், பொதுவான நம் உறவினர்களது மிக்க பசி நீங்க, முன்னாளில் குறித்த அளவு குறிப்பிட்டுக் கடன் தந்தோர்க்கும், மற்றும் இன்ன தன்மையர் என்று கருதாது, என்னிடம் கேட்டே பிறர்க்கு வழங்க வேண்டும் என்றும் முடிவெடுத்து விடாது, பரிசாகப் பெற்ற பொருளைச் சேமித்து வைத்துப் பன்னெடுங் காலம் பிற்காலத்தே வளமுற வாழலாம் என்றும் முடிவு செய்து விடாமல், கிடைத்த பொருளை எல்லார்க்கும் வழங்கு வாயாக” என்று விரிவாகக் குறிப்பிட்டார்.

மனித குலத்திற்கே மாண்புறு கருத்தினை நல்கிக் கொண்டிருக்கும் பெருஞ்சித்திரனாரின்சிறந்த கருத்த மைந்த பாடலைக் காண்போம்:

நின்னயந்து உறைார்க்கும் கேயந்து உறைார்க்கும் பன்மாண் கற்பின்கின் கிளைமுதலோர்க்கும் கடும்பின் கடும்பசி தீர யாழகின் நெடுங்குறி எதிர்ப்பை கல்கி யோர்க்கும் இன்னோர்க்கு என்னாது என்னொடும் சூழாது வல்லாங்கு வாழ்தும் என்னாது நீயும் எல்லோர்க்குங் கொடுமதி மனைகிழ வோயே பழந்துங்கு முதிரத்துக் கிழவன் திருந்துவேற் குமணன் கல்கிய வளனே

-புறநானூறு 163 ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் நிகழ்ந்த இந்நிகழ்ச்சியினைக் காணும்போது. தமக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/79&oldid=586977" இருந்து மீள்விக்கப்பட்டது