பக்கம்:அறநெறி.pdf/92

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 அறநெறி

பழந்துங்கு முதிரத்துக் கிழவன் திருந்துவேல் குமணன் நல்கிய வளனே’

-புறநானுாறு : 163

இவற்றால், பகுத்துண்டு வாழும் வாழ்க்கை பெரும் சிறப்புடையது என்பது புலனாகின்றது.

2 நல்லாற்றுப் படும்நெறி

இவ் உலகில் மூன்றில் இரண்டு பங்கு நிலம் நீராக உள்ளது. அக் கடல் சூழ்ந்த உலகை வெண்கொற்றக் குடையின் கீழ் அமர்ந்து எல்லோருக்கும் பேரரசராகசக்கரர்ைத்தியாக ஒருவன் ஆளுகின்றான் அவனுடைய ஆட்சியின் கீழ் மன்னரும் மறவரும் வேளிரும் வேந்தரும் கைகட்டிசி சேவகம் செய்கின்றனர். இது ஒரு பக்கம். பிறிதொரு பக்கம் நள்ளிரவிலும் நடுப்பகலிலும் கண்ணுறங்காமல் விலங்குகளை வேட்டையாடித் திரியும் கல்லி அறிவு அற்ற ஒரு வேட்டுவன். இவ்வாறு இருவேறு துருவங்கள்; இரு வேறு வாழ்க்கை நிலைகள். ஆனால், இவ் இருவரும் உயிர் வாழத் தேவையானவை நாழி அரிசிச் சோறு மட்டும்தான். இவ்இருவரும் தம் மானத்தைமறைக் கப் பயன்படுத்தும் துணி இரண்டே இரண்டுதான். ஒன்று இடையில் உடுத்துவது. மற்றொன்று தோளில் தொங்கப் போட்டுக் கொள்ளும் மேலணி. ஆக இரண்டு துணிகள் இருந்தால் இருவரும் தத்தம் மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளலாம். இவர்கள் வாழ்வு இயக்கத்திற்குத் தேவை யான பிற பொருள்களும் ஒவ்வொருவருக்கும் ஒன்றாகவே அமைகின்றன. இத்தகைய வாழ்க்கைப் போக்கு அமைந்த இவ் உலகத்தில் செல்வத்தைத் தேடுவதற்காகவே மனிதனுடைய வாழ்க்கையின் பெரும் பகுதி கழிகின்றது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/92&oldid=586999" இருந்து மீள்விக்கப்பட்டது