பக்கம்:அறப்போர், அண்ணாதுரை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

அறப்போர்



அன்று, நாம், இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி நடத்திய போது, ஏதோ அரசியல் சூழ்ச்சி என்று கூறினார் உண்டு; கூறிடக் கொஞ்சம் ஆதாரமும் கிடைத்தது; ஏனெனில், அப்போது நமக்கு இந்த அரண்மனை வாசிகளின்--ஆகா வழிகளின் தொடர்பு இருந்தது--தொடர்புதான்-தோழமை அல்ல ! அரண்மனை வாசிகளின் தொடர்பு இருந்ததற்குக் காரணம், அப்போது, நாம் தனியாக, திராவிடர் கழகமாக, விளங்கவில்லை. நமது தலைவரின் தளராத உழைப்பைத் தர்பார் சுந்தரர்கள் தங்கள் தன்னலத்துக்காகப் பயன்படுத்திக்கொள்ள, தந்திரமிட்டு வந்த காலம். ஜஸ்டிஸ் கட்சியிலே, சீமான்களும், துரைமார்களின் செல்லப் பிள்ளைகளும், இருந்துகொண்டு, தியாகரும், நாயரும் அமைத்த கொள்கையை வெறும் கேலிக்கூத்தாக்கி, கட்சியை, அரசியல் கழைக் கூத்தாடிகளின் கொட்டகை ஆக்கி வைத்திருந்த காலம்; நமது தலைவருக்கும், இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்களுக்கும், ஐஸ்டிஸ் கட்சியின் நிர்வாகக் கூட்டத்திலே இடம் அளிப்பதையே, ஏதோ பெரிய மனது வைத்துச் செய்கிற பெரிய உபகாரம் என்று எண்ணி இறுமாந்திருந்த காலம்.

அந்தத் தொடர்பு, நம்மை வேறு கட்சியினர் அலட்சி மாகக் கருத வைக்கவே உதவிற்று. சீமான்களின் மோகனப் புன்னகையை நம் பக்கம் சில சமயம் வீசுவர். கொள்கையைப் பற்றிய திட்டம் என்றாலோ, எள்ளும் கொள்ளும் அவர்கள் முகத்தில் வெடிக்கும். காங்கிரசை எதிர்க்க ஒரு படைதிரட்டித் தயாரித்து வைத்திருப்பதாக, துரைமார்களிடம் கூறி, சுய இலாபம் தேடிக்கொள்வதொன்றே அரண்மனையில் அரசியல் நடத்திய அந்த அபூர்வ மனிதர்களின் அந்தரங்க நோக்கம். அப்படிப்பட்டவர்களிடம் 'தொடர்பு