பக்கம்:அறப்போர், அண்ணாதுரை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி. என். அண்ணாதுரை

23



ஏற்பட்ட எதிர்ப்பு, அப்படிப்பட்ட அசகாய சூரரையே, என்னென்ன சொல்லச்செய்தது என்பதை, அவினாசியார் அறியார்.

"புற்றிலிருந்து ஈசல் கிளம்புவது போலிருக்கிறதே! எங்கிருந்து வருகிறார்கள், இந்தத் தொண்டர்கள்" என்று பேச நேரிட்டது, அந்தப் பேரறிவாளர் பேசினார்--பேசினாரா? --பிரலாபித்தார்.

"இந்தச் சனியனுக்கு இவ்வளவு எதிர்ப்புக் கிளம்பும் என்று தெரிந்தால், இதைத் துவக்கியே இருக்கமாட்டேனே!" என்று அழுதார்.

கையில் கிடைத்ததைக் கொண்டு அடிப்பேன் என்று கர்ஜனை செய்து பார்த்துவிட்டு, இவ்வண்ணம் கதறினார்.

கிரிமினல் சீர்திருத்தச் சட்டத்தைப் பிரயோகப்படுத்ததிப் பார்த்துவிட்டு, இப்படிப் பேசினார்.

'விடுதலை' 'குடி அரசு 'சண்டே அப்சர்வர்' ஆகிய இதழ்களுக்கு 'ஜாமீன்' கட்டச்சொல்லி, உத்தரவிட்டுப் பார்த்துவிட்டு, இதுபோலக் கைபிசைந்துகொண்டு கதறினார்

'விடுதலை' ஆபீசைச் சோதனையிட்டுப் பார்த்துவிட்டு, இந்தி எதிர்ப்பு நிலையத்தைப் பிரித்துப் போட்டுப் பார்த்து விட்டு, இந்தி எதிர்ப்பு முகாமிலேயே பேதமூட்டிப் பார்த்து விட்டு, கடைசியில் ஆச்சாரியார், அழுகுரலில்தான் பேச நேரிட்டது. ஆச்சாரியார் அந்நிலை அடைந்தார் என்றால், அவினாசியார், தனக்கு எந்நிலை ஏற்படும் என்பதைச் சற்று சிந்திக்கவேண்டும்.