பக்கம்:அறப்போர், அண்ணாதுரை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

அறப்போர்



யான பலம்--பக்களின் ஆதரவு அன்று, நமக்கு இருந்ததை விட இன்று அமோகம்; 'தமிழ் மணி' கணகணவென ஒலிக்கும் வேளை; அந்த எழுச்சிக் குரலை அடக்க, வெள்ளி மணிகளும், வேதிய மணிகளும் வீறிட்டழுது பார்க்கும் காலம்! அன்று சாமான்யர்களாக இருந்தோம்--வெள்ளையரின் மேற்பார்வையின் கீழ் ஆட்சி செய்யும் அளவுக்கு மட்டுமே அந்தஸ்துப் பெற்றிருந்தோம்--இன்றோ வெள்ளையர் வீற்றிருந்த வெல்வெட்டு மெத்தைகளிலே கொலுவீற்றிருக்கிறோம் என்று இந்த மாறுதலை, மமதையை மட்டுமே தரக்கூடிய இந்த உயர்நிலையை எண்ணி, ஏமாறவேண்டாம். என்று எச்சரிக்கிறோம் நாடாள வந்தோரை. அன்று, மொழிப் போரில் கலந்துகொள்ளாதிருந்த ஆயிரமாயிரம் தமிழர்கள், இன்று, ஆதரவு தர முன்வந்துள்ளனர். நமது பலத்திலாவது, அவினாசிகளுக்குச் சந்தேகம் பிறக்கக்கூடும்--அந்த ஆயிரமாயிரம் தமிழர்களின் பலத்திலே, சந்தேகம் பிறக்காது என்று நம்புகிறோம்--ஏனெனில், அவர்களின் பலம்தான், அவினாசிகளை ஆளவந்தார்களாக்கிற்று--ஆங்கிலரை ஓட்டிற்று--ஏகாதிபத்தியம் அமைத்திருந்த எண்ணற்ற இடையூறுகளைப் பொடிப்பொடியாக்கிற்று. அவர்கள் காங்கிரசின் மூலபலம்! அந்த 'மூலபலம் இன்று ஆள வந்தார்களின் அட்டகாசத்துக்குப் பராக்குக் கூறிக்கொண்டிருக்க மறுக்கிறது; ஆண்மையை இழக்க மறுக்கிறது; அறப்போரில் ஈடுபடத் துடிக்கிறது; அவினாசியாருக்கு இந்தச் செய்தியை அர்ப்பணிக்கிறோம்.

மகாமேதை--காந்தீய ஸ்லோகங்களுக்கு வித விதமான பாஷ்யம் கூறும் பண்டித சிரோமணி, குல்லூகபட்டர் என்றெல்லாம், புகழ் பெற்ற ஆச்சாரியார், இந்தக் கட்டாய இந்தியைத் திணித்து, தமிழரின் உள்ளத்தை மிதித்ததால்