பக்கம்:அறப்போர், அண்ணாதுரை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி. என். அண்ணாதுரை

21


அந்தப் போராட்டத்துக்கு இந்த எதிர்ப்புகள் இடையூறாக இருக்கக்கூடாது என்பதற்காக எதிர்ப்புக்களையெல்லாம் எதிர்த்துப் போராடினோம். ஆனால், இன்றைய நிலை அதுவல்ல. கிடைத்த சுதந்திரத்தைக் கொண்டு நாட்டிலே அமைதியை நிலவச் செய்து, உற்பத்தியைப் பெருக்கி, முதலாளித்துவத்தை முறியடித்து, தொழிலாளரை வாழ வழிசெய்யவேண்டும் என்பது நமது குறிக்கோளாகி விட்டது. எனவேதான், இப்படிப்பட்ட வேளையில் வீண் வம்பு எதற்கு என்கிறோம். இந்தி கட்டாய பாடமாக இருப்பதைவிட, இஷ்ட பாடமாக இருப்பதே உண்மையில் பலன் தரக்கூடிய முறை. சர்க்கார் தமிழரின் வெறுப்புக்கு ஆளாகாதிருக்கவேண்டுமானால், இம்முறையைக் கடைப்பிடிப்பதே சாலச் சிறந்தது. இதனால் நாம் இந்தியை வேண்டாமென்று சொல்லுவதாக யாரும் கருதி விடக்கூடாது. இந்தி மட்டுமல்ல, வேறு எத்தனை பாஷைகளை வேண்டுமானாலும் மக்கள் தெரிந்துகொள்ளுவது நல்லது என்பதே நமது அபிப்பிராயம். தமிழ் நாட்டின் தற்போதைய நிலையில் கட்டாய ஹிந்தி கூடாது என்பதை கருத்துடையோர் யாரும் மறுத்துக் கூறமாட்டார்கள்.

"எனவே, எல்லாவற்றையும் உணர்ந்த நாம் நாட்டின் நிலை யறிந்து, நடு நிலை நின்று நல்லதைச் சொல்லுகிறோம். சர்க்காரும், தலைவர்களும், கேட்டால் கேட்கட்டும் ; கேட்கா விட்டால் போகட்டும்!"

அன்று இருந்ததை விட இன்று காங்கிரசின் பலம் வளர்ந்திருக்கிறது என்பதற்கான எடுத்துக்காட்டுகளைக் கூறினோம்; ஆனால், அந்தப் 'பலம்--ஒரு மாய மான்--பொன் மான்--பதளி, பளபளப்பு. இவை, ஆனால் உண்மை-