பக்கம்:அறப்போர், அண்ணாதுரை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

அறப்போர்


 இலேசாக இருந்து இன்று கனமாகியுள்ள அவினாசியார் இதை அறிந்துகொள்ள முயற்சிக்கட்டும்---பிரமாதமான மூளை பலம் தேவையில்லைை இதற்கு---சராசரி அறிவு போதும்; அவினாசியாருக்கு அந்த அளவு நிச்சயம் உண்டு; சற்றே சிந்திக்கட்டும்---அன்று இருந்த நிலைக்கும் இன்று இருப்பதற்கும் இடையே உள்ள வித்தியாசம் விளங்கும்.

ஆளவந்தவருக்கு, சிந்திக்க அவகாசம் இல்லாமல் போய்விடக்கூடும். எனவே, அவருக்கு, அன்று இருந்த நிலைமைக்கும் இன்றுள்ள நிலைமைக்கும் உள்ள வித்தியாசத்தை நாமே விளக்கியும் விடுகிறோம்--நமது சொந்தக் கருத்தின் துணைகொண்டல்ல---அவினாசிகள் அறிந்திருக்கும் 'தமிழ் மணி' எனும் காங்கிரஸ் ஏட்டின் கருத்தையே கல்வி மந்திரியாருக்குக் காணிக்கையாகத் தருகிறோம்.

"யாரோ சிலருடைய பூச்சாண்டி" என்று சொல்லப்படுவது ஒரு பத்தாண்டுகளுக்கு முன்னர் உண்மையாக இருக்கலாம்; ஆனால், இன்றைய நிலை அதுவல்ல. தமிழ் நாட்டிலே இன்றைய தினம் மொழிப்பற்று, இனப்பற்று வளர்ந்துவிட்டது. இதில் கட்சி வேறுபாடுகள் கூடக் கவனிக்கப்படுவதில்லை; அவ்வளவு தூரம் நிலைமையிலே மாற்றம் ஏற்பட்டுவிட்டது. இதனை நாம் கண்ணியமாக ஒப்புக்கொண்டே தீரவேண்டும். நடு நிலை நின்று நாட் டைக் கவனிப்போருக்கு இது விளங்காமற் போகாது. நாமும் ஒரு காலத்தில் கட்டாய இந்திக்கு ஆதரவு கொடுத்து வந்தோம். இந்திக்கு எதிர்ப்புக் காட்டியோருக்கு நாம் எதிர்ப்புக் காட்டி, அதனால் கல்லடியும், சொல்லடியும் பட்ட காலம் ஒன்றுண்டு. இவ்வளவும் எதற்கு? நாடு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காலத்தில்