பக்கம்:அறப்போர், அண்ணாதுரை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

அறப்போர்


ஒரு டாடா பிர்லா திட்டத்தைத் தயாரித்தார். அதன் விளைவாகப் பெரிய ஆபத்து இந்தியாவின் பொருளாதாரத் துறையிலே ஏற்படும் நிலைமை உண்டாகியிருக்கிறது.

சில உதாரணங்களை எடுத்துக்கொள்வோம். பிரிட்டனிலிருக்கும் 'மாரிஸ்' என வழங்கப்படும் கார்களை உற்பத்தி செய்யும் நப்பீல்டு பிரபுவும் இந்தியாவிலிருக்கும் பிர்லா என்னும் பிரபல முதலாளியும் சேர்ந்து ஆரம்பித்திருக்கும் ஒரு ஸ்தாபனம் இந்துஸ்தான் மோட்டார் கம்பெனி என வழங்கப்படுகிறது. இதில் சுமார் 100-க்கு 25 சதவிகிதம் நப்பீல்டு பிரபுவுக்குப் பங்கு இருப்பதாகப் பம்பாயில் வெளியாகும் 'ப்ரீ பிரஸ் ஜர்னல்' என்னும் பத்திரிகையின் வாயிலாகத் தெரியவருகிறது. இந்தக் கம்பெனி, 'இந்துஸ்தான் டென்' என்னும் கார்களை உற்பத்தி செய்வதாகும். இந்தியாவிலே செய்யப்படும் முதல் கார் இதுதான் என்று பல பத்திரிகைகளிலே நாம் பார்த்தோம். ஆனால் 'காமர்ஸ்' என்னும் பத்திரிகையிலிருந்து இந்தக் காரின் முக்கியமான உறுப்புக்களெல்லாம் இங்கிலாந்திலிருந்து நமது தேசத்துக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன என்பதும், அவைகளை ஒன்று சேர்த்துக் காரை ஓடும் நிலைமைக்குக் கொண்டு வருவதுதான் இந்தியாவில் நடக்கும் மோட்டார்த் தொழில் என்பதும் தெளிவாகிறது. ஆகையால் 'இந்துஸ்தான்' என்னும் பெயரைத் தவிர இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டது மேற்படி காரில் ஒன்றும் இல்லை என்பது தெளிவாகிறது.

இரண்டாவதாக,சாய உற்பத்தித்தொழிலை எடுத்துக் கொள்வோம். இம்பீரியல் கெமிகல்ஸ் என்னும் பெயர் எல்லோருக்கும் தெரியும். அது சமீபத்திலே டாடா கம்-