பக்கம்:அறப்போர், அண்ணாதுரை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி.என்.அண்ணாதுரை

29



பெனியாருடன் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கிறது. அந்த ஒப்பந்தப்படி அந்தக் கம்பெனி உற்பத்தி செய்யும் சாயங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டதாக விற்கப்படுகிறது.

இந்தியாவிலே பெரும் பணக்கார முதலாளிகளில் ஒருவரான டால்மியாவை எடுத்துக்கொள்வோம். 'டைம்ஸ் ஆப் இந்தியா' என்னும் பத்திரிகையையும் அதை உற்பத்தி செய்யும் சாதனங்களையும் அவர் சுமார் 21 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறார். எனினும், வெள்ளையர்களுடைய ஆதிக்கத்தில் எவ்விதமிருந்ததோ அப்படியே தான் இன்னும் அது இருக்கிறது.

யுத்த காலத்திலே 1942ம் வருஷம் அமெரிக்க டெக்னிகல் தூது கோஷ்டி 'கிராடியின்' தலைமையில் இந்தியாவிற்கு வந்தது நேயர்களுக்கு ஞாபகமிருக்கலாம். அது இந்தியத் தொழில் வளர்வதற்காகக் கூறிய யோசனைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டதாகவே தெரியவில்லை. ஆனால், 1940-ம் வருஷத்திலே, கிழக்கத்திய நாடுகளின் பொருள் பலத்தை அதிகரிப்பதற்காகக் கூடிய ஈஸ்டர்ன் குரூப்' என்னும் மகாநாட்டில், பிரிட்டீஷ் சாம்ராஜ்ய நாடுகளில், ஒரே தொழிலைப் பல நாடுகளில் ஏற்படுத்தித் தொழிலபிவிருத்திப் பலத்தை வீணாக்கலாகாது என்பதைக் காரணமாகக் காட்டி ஆஸ்திரேலியா ஆகாய விமானங்களை உற்பத்தி செய்வதால் இந்தியா அவைகளை உற்பத்தி செய்யக்கூடாது என்று தீர்மானித்தார்கள். இவ்விதம் 'இந்தியாவின் தொழிலபிவிருத்தியை நசுக்கும் கொள்கையே இங்கிலாந்தின் உயிர் நாடி' என்று எண்ணும் பிரிட்டிஷ் வியாபாரக் கூட்டத் தோடு உறவாடி நம் வியாபாரத்தில் பங்கு கொடுத்து, நமது