பக்கம்:அறப்போர், அண்ணாதுரை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறப்போர்

30



வியாபாரத் திட்டத்தை அவர்கள் நிர்ணயிக்கும் அளவில் நமது இந்திய முதலாளிகள் நடந்துகொள்வது மிகவும் வருந்தத்தக்க நிலைமைதான்.

முன் கூறியபடியே, மோட்டார் ஹவுஸ் (குஜரத்) லிமிடெட் என்னும் ஸ்தாபனமும், நேஷனல் ரேயான் கார்ப்பரேஷன் என்னும் கம்பெனியும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. இவைகளெல்லாம் இந்தியாவின் புதுத் தொழில்களைக் கட்டுப்படுத்தி அந்நியர் ஆதிக்கத்தில் வைப்பதற்கும், இந்தியாவைப் பிற நாட்டுப் பொருள்களுக்கு ஒரு மார்க்கெட் ஆக்குவதற்கும் ஏற்படுத்தப்பட்ட ஸ்தாபனங்கள் போன்றே வேலை செய்ய முடியும். இப் புது ஏகாதிபத்தியத்தை ஒழிக்கவேண்டும்."


இவ்விதம், 'காலச் சக்கரம்' கட்டுரை வெளியிடுகிறது.

சுதந்திரப் போராட்டத்திலே ஈடுபட்டிருந்த காரணத்தால், நாங்கள் தமிழகம், தமிழ் மொழி, தமிழ்க்கலை, தமிழ் நாகரிகம் என்பவைகளைப்பற்றிக் கவனியாமலிருந்துவந் தோம்---அக்கரை இல்லாததால் அல்ல ; அவகாசம் கிடைக்காததால்---என்பதை இன்று எண்ணற்ற தமிழ் இளைஞர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.

'பிரசண்ட விகடன்' ஆசிரியர் போலச் சிலர், "கட்டாய இந்தி கூடாது, அதை ஒழிக்கக் கிளர்ச்சி நடத்துவோம்" என்று கூறுகிறார்கள். 'தமிழ் மணி' ஆசிரியர்போல், பலர், தமிழகத்தின் தன்மானம் காப்பாற்றப்படவேண்டும், தன்னலக்காரரின் கொட்டம் அடக்கப் படவேண்டும், வகுப்பு வாதம் பேசுவது மட்டுமல்ல,