பக்கம்:அறப்போர், அண்ணாதுரை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி. என். அண்ணாதுரை

35



---போர் வருகிறது. இதிலே தெரிந்துவிடும், சிலர் ஏன் ஒதுங்கினர் என்ற சூட்சமமெல்லாம் என்று கூறப்படுகிறது. ஆம்! அறப்போர் தொடுத்தால்தான், சோதனை வந்தால் தான், சூட்சமம் தெரியும்---நிச்சயம் தெரியும். ஆனால், "பார்த்தீர்களா பயல்களை! போரில் சேரவே காணோமே" என்று பிறர் கூறக்கூடிய நிலையில் இளைஞர் எவரும் இருந்துவிடமாட்டார்கள்---இலட்சியத்தில் பற்றும், அறப்போரில் ஈடுபட்ட அனுபவமும் கொண்ட எந்த இளைஞரும், இந்தச் சோதனையிலே தவறிவிடமாட்டார்கள். மாறாக, ஒதுங்கியிருந்தது இதனால்தான் போலும்---போர் என்றால் முன்னுக்கு வருகின்றனர்---சீர்வரிசை பெறுவதற்கு வராது போயினுங்கூட, போர் என்றால், அழைப்பு கிடைக்காமலும் வருகிறார்கள் என்று கூறும்படியான நிலையில்தான், எந்த இளைஞனும் நடந்துகொள்வான். இதை அறப்போர் தொடுத்ததும் அறிந்துகொள்ளலாம்!

ஒதுங்கி நிற்பவர்கள்---வேறு இடத்தில் இருப்பவர்கள்---எதிர்பாராத இடங்களிலிருந்து வந்து சேருபவர்கள் என்று இம்முறையிலே, படைவரிசை விரிவடையும், பலமடையும், போர் என்றால். ஆட்சியாளர்கள் அந்த அற்புதக் காட்சியைக் காணவேண்டும். தடை செய்யப்பட்ட 'போர் வாள்' தடை செய்யப்பட்ட 'இராவண காவியம்'--திணிக் கப்படும் 'இந்தி' இவைகளுக்கெல்லாம் ஒரே பதில்தான் உண்டு --அறப்போர்! அறப்போர்!!

இந்த ஆட்சியாளர்கள், தமக்கு யாரும் எதிர்க்கட்சி இல்லை என்ற எண்ணத்தால் இறுமாந்துள்ளனர். உண்மையும், அவ்விதமாகவே இருக்கிறது! எதிர்க்கட்சி இல்லை. சட்டசபையிலேயே, தூங்குபவர்களைத் தட்டி எழுப்பக்கூட