பக்கம்:அறப்போர், அண்ணாதுரை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

அறப்போர்



கிளம்பும்போதே, நிலைமையை அறிந்து நடந்துகொள்வார் என்று இன்னமும் நம்புகிறோம்!

மயிலையும் திருவல்லிக்கேணியும், மனோரம்மியமான இடங்கள்---நிமிர்ந்து நடப்போருக்கு---குனிந்து நடப்போருக்கு மிரட்டும் இடங்கள்! ஆம்---ஆம்----ஆனால், மக்கள் மன்றம் அங்கு இல்லை! ஆரியக்கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிருக்கும் அரசியல் கழைக்கூத்தாடிகளும், யார் ஆண்டாலும் நமது வாழ்வு ஆனந்தமாக இருந்தால் போதும் என்று கருதும் அரசியல் தரகர்களுமல்ல, ஒரு நாட்டின் ஜீவநாடி! அவினாசியார், அத்தகையோரின் பேச்சைக் கேட்டு ஏமாறுகிறார். ஆந்தைக்கு அஞ்சி, கிளியைக் கொல்கிறார்! வல்லூறுக்குப் பயந்துகொண்டு மாடப்புறாவைக் கொல்கிறார். புலிவேடமிட்டோர்க்குப் பயந்துகொண்டு, புள்ளிமானைக் கொல்கிறார். இந்திமொழி வேண்டும் என்ற இலாப நோக்குடையார் பேச்சைக் கேட்டுக்கொண்டு, செந்தமிழைச் சீரழிக்கிறார்-- தமிழர் செய்யக்கூடாததைச் செய்யத் துணிகிறார்--பத்துப் பாட்டை'ப் பாடிடும் நாட்டில், செத்த வடமொழிக்குச் சேடியாக இருக்கும் அளவு நிலைபெற்ற இந்தியைக், கட்டாய பாடமாக்குகிறார்- தமிழரின் உள்ளத்தை, அதிகாரக் கோல்கொண்டு குத்துகிறார்--அணைக்க முடியாத பெரு நெருப்பை மூட்டிவிடுகிறார்--ஆண்மைத் தமிழரை, அறப்போருக்கு அழைக்கிறார்!

ஆம்! ஆம்! அறப்போருக்கு ஆயத்தமாக இருக்கத்தான் வேண்டும் என்று 'திராவிடர் கழக'த் தலைவர் அறிவித்துவிட்டார்---தொண்டர்களைக் கண்டு பேசவருகிறார்.

ஒதுங்கி நிற்பவர்கள், அது இல்லை இது இல்லை என்று பேசுபவர்கள் ஆகியோருக்கெல்லாம், சோதனை வருகிறது