பக்கம்:அறப்போர், அண்ணாதுரை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி. என். அண்ணாதுரை

33



வேறுவேறு கட்சிகள்' என்ற பேச்சுக்குப் பொருள் இனி இல்லை. இப்போது உள்ளது இரண்டே கட்சிகள்--ஒன்று, இந்திய அரசு என்ற சாக்குக் கூறிக்கொண்டு, இலாப வேட்டைக்காரர்களிடம் நாட்டை ஒப்படைப்போர் கட்சி; நாட்டை மீட்டு, நற்பண்புகளுக்கு உறைவிடமாக்கி, மக்களை வாழவைக்க அறப்போர் புரியும் மற்றோர் கட்சி! இவைகளே உள்ளன.

இந்த நிலையைத் தெளிவுபடுத்துகிறார், அவினாசியார், தமிழரை' அறைகூவி அழைப்பதன் மூலம்---கட்டாய இந்தியை நுழைப்பதன் மூலம்.

கடும்போர் மூண்டுவிடும் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. தெளிவிருப்பின்---மிச்ச மீதியாவது இருப்பின்---நாடாள வந்தவர்கள், தெரிந்து கொள்ளலாம். காற்றடிக்குது---கடல் குமுறுது என்பார்களே, அந்த நிலை பிறக்கிறது. 'இந்திக்குத் தமிழ்நாட்டில் ஆதிக்கமாம்---நீங்கள் எல்லோரும் வாருங்கள் தோழர்களே 1' என்ற புரட்சிக் கவியின் குரலொலி கேட்கிறது! "மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை; நம்மை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை! என்று, எங்கெங்கிருந்தோ, எண்ணற்ற இளைஞர்களின் இருதய கீதம், காற்றிலே மிதந்து வருகிறது. முன்பு ஆண்ட ஆச்சாரியார், கேளாக் காதினர். எனவே, காற்றிலே மிதந்து வந்த கானம், தாலமுத்து மனைவியின் தாலி அறுபட்டு, அந்தத் தமிழ் மாது, "ஐயகோ! என் கணவனின் உயிர் குடித்தாயே, இந்திப் பேயே!" என்று அலறித் துடித்து அழும் அளவுக்கு வளர்ந்தபிறகே அவர் காதில் பட்டது. அவினாசியாருக்குக் கேளாக் காதிருப்பதாக நாம் கேள்விப்படவில்லை. எனவே, தமிழரின் படைவரிசையில் பேச்சுக்