பக்கம்:அறப்போர், அண்ணாதுரை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறப்போர்

32



கற்கள் வீழ்ந்தன---கண்டனச் சொற்கள் வீழ்ந்தன---நமது உடலிலிருந்து இரத்தம் சொட்டிற்று, கண்களிலிருந்து நீரும் சொட்டிற்று--நாம் களைத்துவிடவில்லை பாதையினின்றும் விலகிவிடவில்லை---கற்கள் விழுவது குறையலாயிற்று---கற்களை வீசினோர், இப்போது அதோ, தமிழ் மொழி, தமிழரசு, தமிழ் சோஷலிய அரசு, வடநாட்டு வாணிப ஆதிக்க ஒழிப்பு முறை என்ற பலப்பல பகுதிகளில்--நாம் செல்லும் பாதையிலே உள்ள பகுதிகளில் வரக் காண்கிறோம்---வாட்ட வருத்தத்தை மறக்கிறோம்---வாழ்க நம் தோழர்கள்! வளர்க அவர்தம் ஆர்வம்! என்று கூறுகிறோம்.

அவினாசியார், இந்தத் தோழர்களை ஒன்றுசேரச் செய்கிறார்---அவரும் திராவிடர்தானே !

கட்சி வேறுபாடுகளைக் கூடக் கவனிக்கமாட்டார்கள், இந்த மொழிப் பிரச்சினை பற்றிய கிளர்ச்சியில்---என்று 'தமிழ்மணி' எழுதுகிறது. உண்மை! ஆனால், ஊடுருவிப் பார்த்தால், தமிழருக்குள் இருப்பதாகக் கருதப்படும் கட்சி வேறுபாடுகள், மனப்பிராந்தி, அல்லது நெடுநாட் பழக்கத்தால் ஏற்பட்ட எண்ணம், உண்மை நிலையல்ல---என்பது விளங்கும். பெரியாரின் தூத்துக்குடிப் பேருரை, இதனைத் தெளிவுபடுத்தியுமிருக்கிறது. அன்றாட அரசியல் பிரச்சினையும், ஆட்சியைக் கைப்பற்றும் பிரச்சினையுமல்ல; திராவிடர் கழகத்துக்கு. நாட்டுக்கு ஓர் புதிய நிலை -மக்களுக்கு ஓர் புதிய மாண்பு---அரசுக்கு ஓர் புதிய அந்தஸ்து--அவினாசிகளுக்கும் ஓர் அற்புதமான விடுதலை---டில்லியிலிருந்து---படேலிடமிருந்து---வடநாட்டு பாசிசத்திடமிருந்து விடுதலை வாங்கித்தரும் எண்ணம், திராவிடர் கழகத்துக்கு! எனவே,