பக்கம்:அறப்போர், அண்ணாதுரை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி. என். அண்ணாதுரை

43



திருமயிலையும், திருவல்லிக்கேணியும் ஒன்று கூடிக் கொள்வது ரொம்ப சகஜம். ஆரியத்திற்கு ஆபத்தென்றால் ஆச்சாரி யாரும், சத்தியமூர்த்தியும் ஒன்றுசேர்ந்து கொள்வார்கள் அரசாங்க எதிரிகளான அவர்களோடு, அரசாங்கத்தின் கையாட்களான அல்லாடி கிருஷ்ணசாமி அய்யரும், சர். சி. பி. ராமசாமி அய்யரும் கூட ஒன்றுகூடிக்கொள்வார்கள். ஆனால், என்னதான் அவசியம் ஏற்பட்டபோதிலும் இரு கட்சிகளில் உள்ள தமிழர்கள் ஒரு பொதுக் காரியத் தில் மனமொப்பிக் கூடி வேலைசெய்ய மாட்டார்கள். அப்படிப்பட்ட பரிதாபத்துக்குரிய நிலை, இந்நாட்டில் பார்ப்பனியம் தங்கு தடையின்றி வளர்ந்தோங்க மூலகாரணமாயிருந்த நிலை, இன்றோடு மாய்ந்து போனது. இனி மயிலையும் திருவல்லிக்கேணியும் கூட கலகலக்கும். தமிழர்கள் ஒன்றுபட்டு விட்டார்கள், இனி இவர்களை ஒடுக்க முடியாது என்பதை உணர்ந்து கொள்வார்கள். ஒற்றுமையைக் குலைக்கப் பார்ப்பார்கள். ஆனால், அது இனிப் பலிக்காது. இனி அவர்களால் தமிழ்நாட்டை வடநாட்டாருக்குக் காட்டிக் கொடுக்க முடியாது.

தமிழர் பேடிகளல்லர்!

தமிழ்நாடு பாலைவன நாடல்ல, பிறரை எதிர்பார்த்து வாழ. தமிழர்களும் பேடிகளல்லர், பிறர்க்குப் புறமுதுகு காட்டி ஓட.

தமிழர்கள் மாவீரர்கள்! முடியுடை மூவேந்தரின் சந்ததியார்கள். கடல் கடந்து சென்று பர்மா தேசத்தைக் கைப்பற்றி ஆண்டவர்கள். பல தூர அயல் நாடுகளோடு சிறப்பாக வாணிபம் நடத்தியவர்கள். இவையெல்லாம் திரு விளையாடற் புராணக் கூற்றுக்கள் அல்ல; சரித்திர உண்மை-