பக்கம்:அறப்போர், அண்ணாதுரை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

அறப்போர்



கள்! எங்கள் இருதய கீதமாக இன்றுவரை இருந்து வருவன இவைகள். எனவே, எங்களை அழிக்க எக்காலும் ஆரியத்தால் முடியாது. எனவே, அதைரியம் வேண்டாம்; அறப்போர் தொடுக்க ஆசி கூறுங்கள்! 'தமிழ் காக்கப் போர் தொடுங்கள்' என்று தலைவர்களே கட்டளை இடுங் கள். தமிழ் வாழ்க, ஹிந்தி ஒழிக என்று அன்று கூறியதற்காக வெலிங்டன் துரையவர்களால் தயாரிக்கப்பட்ட கிருமினல் சீர்திருத்தச் சட்டத்தின் கீழ் அன்று சிறைப்பட்டோம். 1000-க்கு மேற்பட்டவர்கள் சிறைபுகுந்தோம். பெல்லாரி சிறையில் பெரியார் அவர்கள் வாடச் சகித்திருந்தோம். அவருடைய உடலுக்கு பெல்லாரி உஷ்ணம்தான் ஏற்றது என்றும், நடராஜன் படிக்கத் தெரியாதவன், அதனால் ஹிந்தியை எதிர்த்துப் பிணமானான் என்றும் ஆச்சாரியாரால் கூறப்பட்ட கடுமொழிகள் கேட்டுச் சகித்திருந்தோம்!

எனவே, சகித்திருந்தது போதும்! வாதாடிப் பார்த்ததும் போதும்! இனியும் தமிழர்கள் பொறுக்கமாட்டார்கள்!

இனிப் போர்! போர்!! போர்!!!

போர் தொடுப்பது தவிர வேறு வழி இல்லை. இன்றைய அரசாங்கத்திற்குப் போர் தவிர வேறு எதுவும் புத்தி கற்பிக்காது. அரசாங்கத்தினர், 10 ஆண்டுகளுக்கு முன்பு தமக்கிருந்த பலத்தைக் காட்டிலும் இப்போது அதிக பலம் பெற்றிருப்பதாக நினைத்திருக்கிறார்கள். உண்மைதான்! இன்று அரசாங்கத்தினருக்குக் கிடைத்திருக்கும் பலம் முன்னைவிட அதிகமேதான்; ஆனால் இந்த 10 ஆண்டில் நமது நிலையும் எவ்வளவு வளர்ந்து விட்டது, எவ்வளவு அதிக பலம் பெற்று-