பக்கம்:அறப்போர், அண்ணாதுரை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி. என். அண்ணாதுரை

45



விட்டது என்று அவர்கள் அறிந்தார்களில்லை! இவர்கள் எதைத்தான் உள்ளபடி அறிந்தார்கள்?

நம் பலம்

சென்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது, நம்மிடையே நண்பர் சிவஞானம் இருந்தாரா? இல்லையே! இல்லை என்பதை அவரே ஒப்புக்கொள்வாரே! தோழர் நாரண துரைக்கண்ணன் நம்மிடையே அன்று இருந்தாரா? இல்லையே! அது சமயம் அவர் 'தமிழர் யார்?' என்று புத்தகம் வெளியிட்டுள்ளார். அதைப் படித்துப் பாருங்கள்! அவர் அன்று நம் ஹிந்தி எதிர்ப்பு இயக்கத்தையும் தோழர் பன்னீர்ச்செல்வத்தையும் எவ்வளவு கண்டித்திருக்கிறார் என்பது விளங்கும். நமது இயக்கத்தின் வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டு இது ஒன்றே போதும்! இந்த 10 ஆண்டுகளில் நமது இயக்கம் பல நூறு மடங்காக வளர்ந்துவிட்டது. எனவே, போராட்டத்தில் வெற்றி நமக்குத்தான் கிடைக்கும். அன்றிருந்த ஆச்சாரியாராலேயே நம்மை அழிக்க முடியாமற் போய்விட்டதென்றால், நமது எதிர்ப்பைச் சமாளிக்க முடியாமற் போய்விட்டதென்றால், இந்த அவினாசியார் நமக்கு எம்மாத்திரம்? எனவே மறியல் ஆரம்பிப்போம், மந்திரியார் வீட்டு முன்போ, அல்லது பாடசாலைகளின் முன்போ! மந்திரியாரின் வீட்டின் முன்பு மறியல் செய்வது முடியாத காரியம்.

ஏனெனில் அவர்கள் தற்போது மக்கள் நடமாடும் இடத்தில் குடியிருக்கவில்லை. அடையாறில் குடியிருப்பு. அதுவும் ஆற்றோரத்தில் ! ஒரு பக்கம் பணத்திமிர் பிடித்த அண்ணாமலை செட்டியார் அரண்மனை. மறுபக்கம் அதை எதிர்பார்த்து நிற்கும் சுடுகாடு. நல்ல பொருத்தமான இடத்தில் தான் குடியிருக்கிறார்கள்.