பக்கம்:அறப்போர், அண்ணாதுரை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

அறப்போர்



இதை எல்லாம் அவினாசியாரே அறிவார். அறிந்தும் வடநாட்டினரின் உத்திரவிற்கு அடிபணிந்துதான் அதை இந்நாட்டில் புகுத்தியுள்ளார். இதில் ஐயமில்லை. இதை அவரே ஒன்றிரண்டு இடங்களில் ஒப்புக்கொண்டுள்ளார். மந்திரியாக இருக்க விரும்புகிறார்.

எனவே, வடநாட்டுக்கு மண்டியிட்டுக் கிடக்கிறார். மந்திரியாயிருப்பதை விட மானமுள்ள மனிதனாக, உண்மைத் தமிழனாக இருப்பது அவசியம் என்பதை மறந்தார். எனவே, இந்தியைப் புகுத்துகிறார். மானத்தை இழந்த மந்திரியார் மதியை மட்டுமா இழக்காமல் இருப்பார், அவரிடம் நியாயம் எடுத்துக் கூற? எனவே, திடமாக அறப்போர் தொடுக்கவேண்டியதுதான். அதில் நாம் எல்லோரும் ஈடுபடவேண்டியதுதான்.

போர் முரசே இறுதிக் கட்டம்

ஹிந்தி நுழைவால் தமிழ் கெடுமா, கெடாதா என்பதற்குப் பதில் நாம் யாரைக் கேட்போம்? மறைமலையடிகளையும், திரு. வி. க. வையும் கேட்பதா, அல்லது கனம் கோபால் ரெட்டியாரையும், காளா வெங்கட்ராவையும் கேட்பதா? மறைமலையடிகளாரும், திரு. வி. க. அவர்களும் ஹிந்தி நுழைவால் தமிழ் கெடும்; தமிழர் கலாசாரம் கெடும் என்று அழுத்தந் திருத்தமாகக் கூறிவிட்ட பிறகு, அவர்கள் சாட்சி நமக்குக் கிடைத்துவிட்ட பிறகு, போர் முழக்கம் செய்வது தவிர, போர் முரசு கொட்டுவது தவிர, நமக்கு வேறென்ன வேலை இருக்கிறது? தமிழ் நாட்டு மூவேந்தர் போற்றி வளர்த்துக் காப்பாற்றி வந்த தமிழ்ப் பண்பை, தமிழ்க் கலாசாரத்தை, கனக விசயன் சந்ததியார் கெடுக்க முன்வந்துவிட்டனர். எனவே, மூவேந்தர் சந்ததியாராகிய