பக்கம்:அறப்போர், அண்ணாதுரை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி.என்.அண்ணாதுரை

49



நாம் இனியும் இந்தக் கலாசாரக் கொலைஞர்களைச் சும்மா விட்டுவைத்திருக்க முடியாது. தமிழனுக்கிருப்பது உயர் தனித்தோள்கள். அவை தமிழ் காக்க, வாள் ஏந்தத்தான் இருக்கின்றன. வாள் ஏந்திப் போர் தொடுக்காவிட்டாலும் மன உறுதி யெனும் வாளேந்தியேனும் அறப்போர் தொடுப்போம். அதுதான் அவினாசியாருக்கும் புரியும். மற்ற நியாய வாதங்கள் எல்லாம் அவருடைய மூளையில் குழப்பத்தைத்தான் உண்டாக்கும். ஏற்கனவே குழம்பி யிருக்கும் மூளை மேலும் குழம்பித்தான். போகும். பாவம் புத்தி குழம்பினால் அவருக்கு ஆற்றுவாரோ, தேற்றுவாரோ கூட அருகில் கிடையாது. ஏனெனில், அவருக்கு மனைவி, மக்கள் இல்லை. அவர் ஓர் பிரம்மச்சாரி. அதிலும் மூல வியாதிக்காரர். அப்படிப்பட்டவரிடம் போய் தமிழின் இனிமை குறித்து எடுத்துச் சொன்னால் அவருக்குக் கோபம் வராமல் வேறென்ன வரும்?

தமிழர் வரலாற்றில் முத்திரை

இதுவரை ஒன்றுபடாத தமிழர்கள், இன்று இம் மாநாட்டில் ஒன்றுகூடி இருப்பதால், இம்மாநாடு தமிழர் சரித்திரத்தில் முத்திரை பொறித்தது போன்றது. பெரியார் அவர்கள், மறைமலையடிகளார், நாரண துரைக்கண்ணன், சிவஞான கிராமணியார், திரு. வி. க. அவர்கள் ஆகியவர்கள் முத்திரை மோதிரத்தின் சின்னங்கள்! இலச்சினை இடவேண்டியவர்கள். எனவே, இம்முத்திரை பொறித்துப் போர் ஓலை இன்றே அனுப்பப்படட்டும். அது அவசியம் அவினாசியார் புரிந்துகொள்ளும் தமிழிலேயே இருக்கட்டும்.

"ஹிந்தி நுழைவால் தமிழர் பண்பு கெட்டுப்போம். தமிழர் கலாசாரம் கெட்டுப்போம். ஆகையால், அமைச்சர்