பக்கம்:அறப்போர், அண்ணாதுரை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி. என். அண்ணாதுரை

51



சென்ற ஹிந்தி எதிர்ப்பின்போது, தாலமுத்துவின் பிணம், ஆஸ்பத்திரியிலிருந்து சுடுகாட்டிற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டபோது, கணக்கில்லாத மக்கள் ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். என்ன நேருமோ என்று பார்ப்பனக் குடும்பங்கள் அத்தனையும் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருந்தன. ஆனால் என்ன நேர்ந்தது? தமிழர்கள் தாலமுத்துவின் பிணம் சாம்பலாகச் சாம்பலாக ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு பெருமூச்சு விட்டனர். ஒன்றிரண்டு கண்ணீர்த்துளி விட்டனர். அவ்வளவு மனோ உறுதியும் பொறுமையும் படைத்தவர்கள் தான் தமிழர்கள்! எனவே, அதிலும் தலைவர்க்குச் சிறு துளியும் சந்தேகம் வேண்டாம். இந்தப் பஞ்ச காலத்தில் நமக்கும் அடிபடப் போதிய வலுவில்லை. அவர்களும் இரண்டு அடிதான் அடிப்பார்கள், அவ்வளவுதான் அவர்களுக்கும் வலுவுண்டு. நாமும் அந்த இரண்டு அடிகளிலேயே கீழே விழுந்துவிடுவோம், அவ்வளவுதான் நமக்கும் தாங்கச் சக்தியுண்டு. நம்மிடம் ஆயுதத் தளவாடங்கள் இல்லை, அவர்களை எதிர்ப்பதற்கு.

இலட்சியம் பெரிது; வெற்றியல்ல !

எனவே, நமது போர் அறப்போராகத்தான் இருக்கும். ரத்தப்போராக்கலாம். அமைச்சர் விரும்பினால் அதை ஆக்கமாட்டார் என்று நினைக்க ஆதாரமொன்றுமில்லை நம்மிடம். அமைச்சர் ரத்தத்தை விரும்பினால் அதற்கும் நாம் தயாராகத்தான் இருக்கிறோம்.

இந்தப் போரில் வெற்றி கிடைக்குமா, தோல்வி கிடைக்குமா என்று சிந்திக்கவேண்டியது அவசியமில்லை. நமது லட்சியத்தை இருதயத்தில் தீர்மானமாகக் கொண்ட