பக்கம்:அறப்போர், அண்ணாதுரை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி. என். அண்ணாதுரை

68



நமக்குத் தெரியும். சில மாதங்களுக்கு முன் ஒரு பொதுக் கூட்டத்தில் "இம்முறை தமிழ் நாட்டில் ஹிந்தி புகுத்தப்படுமானால் நான் எனது நண்பர் அண்ணாதுரைக்கு ஓய்வு கொடுத்துவிட்டு தமிழுக்காகச் சர்க்காரின்மீது போர் தொடுப்பேன்" என்று கூறிய தோழர் செங்கல்வராயன் அவர்கள், சென்னை ஜில்லா காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஆன பிறகு, தான் பொதுக்கூட்டத்தில் பொது மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை மறந்து, தனது நாணயத்தை மறந்து, நாட்டை மறந்து, "ஹிந்தி எதிர்ப்புக்கு எதிர்ப்பிரச்சாரம் செய்வேன்' என்று கூறியிருப்பதும் எங்களுக்குத் தெரியும்.எங்களுக்கு எதிர்ப்பிரசாரம் செய்பவர்கள் யாரையும் நாங்கள் தடைசெய்யப்போவதில்லை. தடை செய்வதும், அவர்கள் கூட்டத்தில் குழப்பத்தை விளைவிப்பதும் அறிவுடைமையல்ல என்பதும் எங்களுக்குத் தெரியும்.

நமது போராட்டம் மொழி ஒன்றிற்காகவே நடத்தப்படும் போராட்டமல்ல. அப்படிச் சொல்வதால் "பின் ஏதாவது அரசியல் லாபத்திற்காக நடத்தப்படும் போராட்டமா இது?" என்று நீங்கள் கேட்கலாம். அதற்கும் இல்லை. "பின் வேறு எதற்குத்தான்?" என்று நீங்கள் கேட்பீர்கள். ஹிந்தி மொழியின் மூலம் ஒருவித வாழ்க்கை வழி ஒன்று நமக்கு வர இருக்கிறது. அவ்வாழ்க்கை வழி திராவிடர்களின் வாழ்க்கை வழிக்கு முரணானது; திராவிட கலாசாரத்துக்கு விரோதமானது; திராவிடர்களின் உயர் பண்புகளைப் பாழாக்கக் கூடியது. எனவே, அம்மொழியை நாம் வேண்டாமென்கிறோம்.

அடிமை வாதம்

மந்திரியார் இதற்கு மறுப்புக்கூற வகையின்றி 'மத்திய சர்க்காரிடமிருந்து நமக்குரிய உரிமையைப் பெற ஹிந்தி