பக்கம்:அறப்போர், அண்ணாதுரை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

அறப்போர்


உரிமைப் போராட்டம்

உரிமைப் போராட்டத்தில் உயிர் போனாலும் பாதகமில்லையென்று துணிந்தவர்கள்தான் தேவை! அத்தகைய துணிவுள்ளவர்களைத்தான் நாமும் போராட்டத்திற்கு வரும்படி அழைக்கிறோம்.

உயிரையும் அர்ப்பணிக்கத் துணிவு பெற்றிராத தோழர்கள் நமது போராட்டத்திற்குத் தேவையில்லை. உறுதியுள்ள தோழர்கள் ஒரு சிலரேனும், அவர்கள்தான் நம் போராட்டத்திற்குத் தேவையே ஒழிய, உறுதியற்ற பெருங்கூட்டமல்ல நமக்குத் தேவையானது. எங்களுக்குள்ள ஆதரவைக் காட்டுவதற்காக அல்ல, நாங்கள் ஹிந்தியை எதிர்த்துப்போர் தொடங்கியிருப்பது; நம்முடைய உரிமையைக் காப்பாற்றத்தான் நாங்கள் போர் தொடுத்து நிற்கிறோம்.

உரிமைப் போரை எதிர்த்து நிற்கும் சர்க்காரை நாங்கள் நன்கு அறிவோம். அதன் சாதனங்கள் எவ்வளவு பலம் பொருந்தியது என்பதும் எங்களுக்குத் தெரியும். சர்க்காரின் சார்பாகப் பிரசாரம் செய்ய 10 மந்திரிகள், 150 எம்.எல்.ஏ.க்கள், எண்ணற்ற தேசீய ஏடுகள், ஒலி நிலையங்கள் இவ்வளவும் இருப்பதும், எங்களைத் தம் இஷ்டப்படி தண்டிக்கவும், அடக்கி ஆட்டிப் படைக்கவும் அதிகாரம் எதிர்ப்பாளர்கள் கையில் இருப்பதும் எங்களுக்குத் தெரியும்.

சர்க்காரை அண்டிப் பிழைப்போர்

மற்றும் சர்க்காரை அண்டிப் பிழைக்கும் சிலர் தம் கொள்கையைச் சமீபத்தில் மாற்றிக்கொண்டிருப்பதும்