பக்கம்:அறப்போர், அண்ணாதுரை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

அறப்போர்



விமானம் அனுப்பிவைப்பார்கள், உடனே வந்து போகும் படி. உடனே ஏதாவது சமரசம் செய்துகொள்ளும்படியும் கூறிவிடுவார்கள். அப்போதுதான் இந்த மந்திரி சபைக்கும் புத்தி வரும். ஆண்டை ஆணையிட்டாலொழிய ஆளமுடியாதவர்களாக ஆகிவிட்டனர், நமது மந்திரிகள், எடுத்ததற்கெல்லாம் டெல்லி செல்ல நேரிட்ட காரணத்தால்.

1948ல் தங்கசாலையில் துவங்கும் போர் விரைவில் பட்டி, தொட்டி பூராவும் பரவுவது நிச்சயம்!

போர் துவங்குகிற இந்த நேரத்தில்--மாண்பு மிக்க தமிழ் காக்கப் போர் துவங்கும் இந்த நேரத்தில்--நாம் ஓர் உறுதி எடுத்துக்கொள்ளவேண்டும். போரை மிக மிக அமைதியாக நடத்த நாம் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.

தொண்டர்களுக்குப் பாராட்டு!

போராட்டத்தில் கலந்துகொள்ள முன் வந்துள்ள தோழர்களை நான் மனமாரப் பாராட்டுகிறேன்!

இப் போராட்டத்திற்குத் தலைமை ஏற்று நடத்துபவர் பெரியார். இவர் காங்கிரஸிலிருந்து விலகியது காஞ்சிபுரத்தில். இந்த எதிர்ப்பில் முதலாவது சர்வாதிகாரியாக இருக்கும் வாய்ப்புப் பெற்ற நான் வசிக்குமிடம் காஞ்சிபுரம். எனவே காஞ்சிபுரத்திற்கும் காங்கிரஸிற்கும் ஏதோ பரம்பரைப் பகைமை இருந்து வருகிறது போலும்!

எனவே இந்தி மொழி, அதுவும் சிறு வயதுப் பிள்ளைகளுக்குக் கூடாது என்பதே இன்றைய போராட்டத்தின் கொள்கையேயன்றி, பள்ளிக்கூடங்களுக்கு மாணவர்கள் அறவே போகக்கூடாதென்பதல்ல, இப்போது துவக்கியுள்ள போராட்டத்தின் லட்சியம். அவ்வித அரசியல் கபோதித்தனம் காங்கிரசாருக்குச் சொந்தமேயன்றி, இந் நாட்டு மக்களின் நல்வாழ்வுக்கான வகையில் பணியாற்ற முற்பட்டுள்ள வேறு எவருக்கும் இருக்க முடியாது.


விக்டரி பிரஸ், பாலக்கரை, திருச்சிராப்பள்ளி