பக்கம்:அறப்போர், அண்ணாதுரை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி. என். அண்ணாதுரை

75



நம்மை எப்போதும் பீடித்து நிற்குமே! எனவே, அதை முதலில் கவனிக்கிறோம்.

பட்டி. தொட்டி யெல்லாம் பரவும் மறியல்

வடநாட்டு வியாபாரிகளின் கடைகளின் முன் நிச்சயம் நாம் மறியல் தொடங்குவோம். அது ‘தினசரி' ஆசிரியருக்குக் கொஞ்சமேனும் உதவியாயிருக்கக்கூடும். அவரை ஒரு வடநாட்டு கோயங்கா படுத்திய பாட்டை அவர் மறந்தாலும் நாம் மறந்துவிட முடியாது. அதே கோயங்காவிடம் ஒரு தென்னாட்டுச் சிவராமன் சிக்கிச் சீரழியும் பாட்டையும் நாங்கள் அறிந்தேயிருக்கிறோம்

தென்னாட்டவரின் மூளை வடநாட்டவருக்கு ஆட்பட்டு அழியவும், தென்னாட்டவரின் உழைப்பு பர்மாவிலும், மலேயாவிலும், தேயிலை, ரப்பர், காப்பித் தோட்டங்களில் பாழாய்ப் போகவும் நம்மால் பார்த்துக்கொண்டிருக்க மூடியாது.

எனவே, நம் போராட்டம் தொண்டைமண்டலப் பள்ளியிலிருந்து தங்கசாலை நெடுகச் செல்லும்; அங்கிருந்து சைனா பஜார் செல்லும்; மவுண்ட் ரோடு செல்லும்; கோவை செல்லும்; திருச்சி செல்லும்.

எங்கெங்கு ஒரு மார்வாரி, ஒரு குஜராத்தி, ஒரு மூல்தானியன் காணப்படுகிறானோ அங்கெல்லாம் போராட்டம் நடைபெறும். சர்க்காருக்குப் புத்தியிருந்தால் சமரசத்திற்கு வரட்டும். இன்றேல் நம்மாலானதை நாம் தொடர்ந்து நடத்திக்கொண்டு போவோம். சர்க்கார் கடுமையான நடவடிக்கை எடுக்க எடுக்க நமது போராட்டம் கல்வித் துறையை விட்டுப் பொருளாதாரத் துறையில் செல்லும். கல்வித் துறையில் போராட்டம் நடந்தால், நேருவும் பட்டேலும் பார்த்துச் சிரித்துக்கொண்டிருப்பார்கள்; சகித்துக்கொண்டிருக்கவும் முடியும். பொருளாதாரத் துறையில் போராட்டம் துவக்கப்பட்டாலோ அவர்கள் சும்மா பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அப்போது கூப்பிடுவார்கள், நமது மந்திரிகளை. பிரத்தியேக