பக்கம்:அறப்போர், அண்ணாதுரை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

அறப்போர்



யங்கத்தை ஏனோ சற்று அவசரப்பட்டு எழுதிவிட்டார் சொக்கலிங்கனார். அவர், சேலத்திற்கு முன்பு நம் கழகம் இருந்த நிலையை நினைத்துக்கொண்டு நாம் எங்கே மது விலக்கு மறியலில் ஈடுபடப்போகிறோம்?' என்று எழுதிவிட்டார். சேலத்திற்கப்புறம் நமது கழகம் புதிய உருவம் பெற்றிருப்பதை, புதிய உத்வேகம் பெற்றிருப்பதை 'தினசரி' ஆசிரியர் அறியார். அதனால்தான் அப்படி எழுதிவிட்டார். நாம் கள்ளுக்கடை மறியலைத் துவக்கி இருந்திருப்போம். ஆனால் அது தேவையில்லாது சட்ட ரீதியாக மது ஒழிப்பு நடந்துவிட்டது.

கள்ளுக் கடையும் மார்வாரிக் கடையும்

ஆனால் நாடார் கள்ளுக்கடை முன் மறியல் நடத்தும் போது, அதன் அருகில் ஷராப்புக்கடை மார்வாரி மெத்தையில் சாய்ந்துகொண்டிருப்பதை நாம் பார்த்துக்கொண்டிருக்க முடியுமா? பாலைவன தேசத்தவரான பிர்லாவும், டாடாவும், டால்மியாவும் இங்கு நம் பணத்தைக் கொள்ளையடித்துக்கொண்டிருப்பதை நம்மால் பார்த்துக்கொண்டிருக்க முடியுமா?

தொண்டைமண்டலப் பள்ளிமுன் துவக்கிய மறியல் எங்கு போய் நிற்கும் என்று நினைக்கிறீர்கள்? நிச்சயம் தொண்டைமண்டலப் பள்ளியோடு நிற்காது. ஹிந்திப் போராட்டம் நடக்கும்போது ஜெர்மன் நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட படத்தை மாட்ட டால்மியா கம்பெனி சிமென்ட் பூசப்பட்ட சுவரில் டாடா கம்பெனி தயாரித்த ஆணியை அடிக்கும்போது நம் மனம் சும்மா இருக்குமா? அந்தச் சுவரில் அடிக்கும் ஒவ்வொரு டாடா கம்பெனி ஆணியும் நமது நெஞ்சில் அடிப்பதுபோல் இருக்குமே! அப்போதுதான் நமது ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் தன் முழு உருவத்தோடு காட்சியளிக்கும்!

கள்ளும், சாராயமும் சொற்ப நேரத்திற்கே, போதை உள்ளவரைக்குத்தான், நம் மனதை மயக்கி நிற்கும். ஆனால், வடநாட்டுக்கலாசாரமோ, வடநாட்டு ஆதிக்கமோ,