பக்கம்:அறப்போர், அண்ணாதுரை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி. என். அண்ணாதுரை

73



நன்றி. உங்கள் ஆதாவைக் கண்டுகொண்ட தமிழ் நாட்டின் முக்கிய ஏடாகிய 'தினசரி ' எழுதியுள்ளதைப் பாருங்கள். பெரியார் இராமசாமி தனது செல்வாக்கை இதற்குத்தானா பயன்படுத்தவேண்டும்?' என்று எழுதியிருக்கிறது. 'செல்வாக்கற்ற இராமசாமி' என்பது 'தினசரி' அலுவலகம் மட்டிலாவது செல்லரித்துப் போய் விட்டதற்காக நாம் மகிழ்ச்சியடைகிறோம்! 'வேறு பல நல்ல காரியங்களுண்டே! அவற்றிற்காகப் பயன்படுத்துவதுதானே' என்று அவர் ஆலோனை கூறியிருக்கிறார். அந்த ஆலோசனை நமக்குத் தெரியும். பெரியாருக்குள்ள செல்வாக்கை, உதாரணமாக, தோழர் சொக்கலிங்கம் அவர்களை மந்திரியாகவோ அல்லது பிரதம மந்திரியாகவோ கூட ஆக்கப் பயன்படுத்தலாம்! இன்னும் கொஞ்சம் சுயநலம் இருந்தால், தோழர் வரதாச்சாரியாரை மந்திரியாக ஆக்கிவைக்கக்கூடப் பயன்படுத்தலாம்.

செல்வாக்குப் பெற்றதேன்?

ஆனால், பெரியார் இராமசாமிக்கு இவையெல்லாம் முக்கியமல்லவே. அவர் செல்வாக்குப் பெற்றதே தமிழர்களை அவர்களது அடிமைத் தளையிலிருந்து விடுவிக்கிறேன் என்று உறுதி கூறியதன் மூலம்தானே. அதற்குத்தானே அதன் ஆரம்பம் முதல் தொண்டாற்றி வருகிறார். அப்படி இருக்க, தமிழர் நலன் கெட அவர் பார்த்திருக்க முடியுமா? இது தெரியாமற் போனதென்ன, சொக்கலிங்கனார் மூளைக்கு. 'மதுவிலக்குக்காக மறியல் நடத்தட்டுமே' என்கிறார். நடத்துவோம், இப்போராட்டம் முடிந்ததும் ஆனால், 'தினசரி' எழுதிய தலையங்கத்தை மட்டும் யாரும் மறந்துவிடாதீர்கள்! இழந்துவிடாதீர்கள்! நன்றாகப் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள் ! இந்தப் போராட்டம் ஏதாவது ஒரு வகையில் முடிந்து நாம் கள்ளுக்கடை மறியல் துவக்குவோமானால், அப்போது 'தினசரி' கட்டாயம் வேறு விதமாக எழுதும். அதை நீங்கள் பார்த்து உண்மையை உணர்ந்துகொள்ள வேண்டும். அத் தலை-