பக்கம்:அறப்போர், அண்ணாதுரை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

அறப்போர்



அரசியல் பதவி வேண்டுமென்றால் கிளர்ச்சி நடத்தித்தானா பெறவேண்டும்? ஓமாந்தூராரை என் முதுகில் தட்டிக்கொடுக்கும்படி செய்தே என்னால் பதவிக்கு வந்துவிட முடியுமே! அது என்ன கஷ்டமா? ஓமாந்தூரார் சர்க்காரை---காங்கிரஸ் சர்க்காரை---வானளாவப் புகழ்ந்தாலே போதுமே! அதை எதிர்ப்பதில்லை என்ற உறுதி கொடுத்தால் போதுமே! பதவி தானே காலடியில் வந்து விழுமே! யார் இல்லை என்று கூற முடியும்? எங்கள் சகாக்களாயிருந்த சர். ஷண்முகமும், டாக்டர் அம்பேத்காரும் என்ன பாப மன்னிப்புச் செய்துகொண்டு காங்கிரஸ் சர்க்காரில் பதவி பெற்றார்கள்? அவர்களைப்போல் நடந்து சுலபத்தில் பதவி பெறும் வழி எங்களுக்குத் தெரியாதென்றா நினைத்துக்கொண்டீர்கள்? அல்லது எங்களுக்குத் திறமையில்லை, மந்திரி பதவி வகிக்கவோ அல்லது வெளி நாட்டுக்குத் தூதுவராகச் செல்லவோ என்றாவது உங்களால் கூற முடியுமா? எங்களுக்கு வகை தெரியாதா? வக்கில்லையா அல்லது வன்மை யில்லையா? இருந்தும் ஓமாந்தூரார் ஆட்சியிடம் தடியடி பட எங்களுக்குப் பித்தமா பிடித்திருக்கிறது? எங்களுக்குப் பித்தம் பிடித்திருந்தால், எங்கள் சித்தத்தில் இவ்வளவு தெளிவிருக்காதே! பித்தம் யாருக்குப் பிடித்திருக்கிறது? எங்களுக்கா, ஆட்சியாளருக்கா என்பதைப் பொதுமக்களே, நீங்களே சிந்தித் துப் பாருங்கள்!

தினசரி ஆலோசனை!

பெரியாரின் அழைத்த குரலுக்குச் செவிமடுத்து அறப்போருக்குத் தயார் என்று தெரிவித்துக்கொண்ட தமிழ் நாட்டுப் பொது மக்களே! உங்களுக்கு எனது