பக்கம்:அறப்போர்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வார்ப்புரு:''கோட்டிடை வைத்த கவளம்''


களைப் பல நாள் வைத்திருந்து உபசரித்துப் பரிசில் வழங்குவதே அவனுடைய நித்தியத் தொழில் என்று சொல்லி விடலாம்.

புலவர்களுக்கு வரிசை அறிந்து பரிசில் தரும் வண்மை அவன்பால் இருந்ததனால் அப் புலவர் பாடும் புகழை அவன் காணியாக்கிக் கொண்டான். அதனால் நாடு முழுவதும் அவனுடைய வள்ளன்மையைப் பற்றிய செய்திகள் பரவின. சேரநாடு முழுவதும் பரவிச் சேர அரசன் காதையும் எட்டியது. அது மட்டுமா? சோழ பாண்டிய நாடுகளிலும் அவற்றிற்கு அப்பாலும் அவன் புகழ் பரவியது. "ஒரு சிற்றரசனுக்கு இத்தனை புகழா!" என்று பேரரசர்கள் அழுக்காறடைந்தார்கள். கடை யெழு வள்ளல்கள் என்று புலவர்கள் ஏழு பேரைத் தேர்ந்தெடுத்துத் தம்முடைய பாடல்களிலே பாராட்டியிருக்கிறார்கள். அதியமான் அவ்வெழுவரில் ஒருவன்.

தியமானுடைய இயல்புகளில் ஈடுபட்டு வியந்த புலவர்களில் ஒளவையார் ஒருவர். தகடூருக்கு அவர் எப்போது வந்தாலும் அதியமானுடைய பெருமைக்கு அடையாளமான ஒரு நிகழ்ச்சியை அவர் அறிந்து பாராட்டுவார். ஒருமுறை ஔவையார் வந்திருந்தார். நாலைந்து

95

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/113&oldid=1267483" இலிருந்து மீள்விக்கப்பட்டது