பக்கம்:அறப்போர்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவரின் வள்ளன்மை


றவன் குமணன் என்னும் மன்னன். புலவர்களுக்குக் கணக்கின்றிக் கொடுக்கும் வள்ளன்மை உடையவன் அவன். அதனால் அவன் பெயர் புலவர்களின் செய்யுட்களாகிய அணி கலத்தில் பதிக்கப் பெற்ற வைரம்போல ஒளிர்கிறது. முதிரம் என்ற மலையைச் சார்ந்த நாட்டை ஆண்டு வந்தவன் அம் மன்னன்.

குமணனைப் பாடிய புலவர்களில் பெருஞ் சித்திரனார் என்பவர் ஒருவர் அவர் சித்திரத் தொழிலில் வல்லவராதலால் அந்தப் பெயரைப் பெற்றார் போலும். அவர் வறுமையால் வாடி நின்றார். பிறரிடம் சென்று தமக்கு வேண்டியவற்றை இரந்துபெற அவர் உள்ளம் இடம் கொடுக்கவில்லை. அவருக்குக் கல்யாணம் ஆயிற்று. அவருடைய குடும்பம் பெரிதாகவே, பெற்றதைக் கொண்டு வாழ அவரால் இயலவில்லை. வறுமை வரவர மிகுதியாக அவரை நெருக்கியது. தமிழ்ப் புலமை மிக்கவரானாலும் யாரிடமேனும் சென்று அவரைப் பாடி எனக்குப் பொருள் வேண்டும் என்று கேட்க அவர் நா வளையாது போல் இருந்தது.

அவருடைய மனைவி சிறந்த அறிவுடையவள். கணவனுடைய வருவாய்க்குத் தக்க வண்ணம் செலவு செய்பவள், தன்னோடு பழகும் - மகளிரைத் தன்வசமாக்கும் நற்குணமும் இனிய

107

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/125&oldid=1267499" இலிருந்து மீள்விக்கப்பட்டது