பக்கம்:அறப்போர்.pdf/126

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறப்போர்


மொழியும் படைத்தவள். கிடைத்ததை வைத்துக்கொண்டு இல்லறத்தை நடத்தி வந்தாள்.

அவளுடைய அன்பிலே ஈடுபட்டவர்கள், அவ்வீட்டின் வறிய நிலையை உணர்ந்து தங்களால் இயன்ற உதவியைப் புரிந்து வந்தார்கள். அவள் அவற்றைப் பெறுவதற்கு உடம்படவில்லை. அன்புடையவர்களோ எப்படியேனும் உதவி புரிய வேண்டும் என்ற எண்ணம் கொண்டார்கள். ஆகவே, “இந்தப் பொருள்களை நாங்கள் தானமாகக் கொடுக்கவில்லை. எப்போது உன்னால் திருப்பிக் கொடுக்க முடிகிறதோ, அப்பொழுது கொடுத்தால் நாங்கள் வாங்கிக் கொள்கிறோம். நீ இரந்து பெற்று வாழ்வதாக எண்ணாதே. இத்தனை நாளைக்குள் கொடுத்துவிடவேண்டும் என்ற கணக்கும் வேண்டாம்” என்றார்கள்.

“நான் திருப்பிக் கொடுக்க முடியாமலே போய்விட்டால்-?” என்று கேட்டாள் புலவர் மனைவி.

“அதனால் எங்களுக்கு ஒரு குறையவும் வந்துவிடாது. இவற்றை மீட்டும் வாங்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமே. எங்களுக்கு இல்லை. நீயோ சும்மா வாங்கிக் கொள்ள மாட்டா யென்பது எங்களுக்குத் தெரியும். ஆகவே கடனாக வாங்கிக் கொள்வாருக்குக்

108

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/126&oldid=1267500" இருந்து மீள்விக்கப்பட்டது