பக்கம்:அறப்போர்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறப்போர்


விருந்தை அளித்தாயே! அதற்கு வேண்டிய பண்டங்கள் உனக்கு எப்படிக் கிடைத்தன?" என்று கேட்பார்.

“பிறகு தந்துவிடுவதாகப் பிறரிடம் வாங்கினேன்” என்பாள் அவர் மனைவி. எப்பொழுது கொடுப்பது, எப்படிக் கொடுப்பது என்பவற்றைப் பற்றி அவர் கேட்கமாட்டார்.

வறிய நிலையில் இருந்தாலும் அவர் வீட்டுக்கு அடிக்கடி உறவினர்கள் வந்து கொண்டு தான் இருந்தார்கள். அவருடைய மனைவியின் சுற்றத்தாரில் மிக ஏழையாக இருந்த யாரேனும் அங்கே வந்து சில நாட்கள் தங்கியிருந்து செல்வார்கள்.

இப்படி வறுமையிலும் செம்மையாக வாழும் வகையைப் புலவர் மனைவி தெரிந்து கொண்டிருந்தாள்.

பெருஞ்சித்திரனார் தம் இல்வாழ்க்கையென்னும் வண்டி இந்த வறிய நிலையிலே நெடு நாள் ஓட இயலாது என்பதை உணரலானார். எப்படியேனும் பொருள் ஈட்டவேண்டும் என்ற நினைப்பு எழுந்தது. கண்ட கண்ட பேரிடம் போய்ப் பஞ்சத்துக்குப் பிள்ளையை விற்பவரைப் போலப் பாட்டுப் பாடிப் பல்லைக் காட்டிப் பரிசு பெற அவர் விரும்பவில்லை. மிகமிகச் சிறந்தவனும், புலவருடைய மதிப்பை நன்கு அறிந்-

110

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/128&oldid=1267502" இலிருந்து மீள்விக்கப்பட்டது