பக்கம்:அறப்போர்.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முகவுரைகுறுங்கோழியூர் கிழார் சோமானுடைய காட்டில் உள்ள அமைதியைப் புலப்படுத்த வருகிறர். அதை நயமாகச் சொல்கிறார். ‘நின்’ காட்டில் ஒரு தெறல் இல்லை; ஆனல் வேறு தெறல் உண்டு, குடிமக்கள் ஒருவில்லை அறியார்; ஒரு வில்லை அறிவார். படையை அறியார்; ஆனால் ஒரு படையை அறிவார். யாரும் நின் மண்ணே உண்ணுர்; ஆனால் இலர் உண்பர் என்று சுவை உண்டாகும்படி சொல்கிறார். சோற்றை உண்டாக்கும் தீயின் தெறலேயும், இந்திர வில்லேயும், காஞ்சிற் படையையும் அறிவார். வயவுறு மகளிர் மண்வேட்டு உண்பர் என்று கூறுகிறர். தெறல், கொலைவில், படை இவற்றை அறியார்; பிறர் நின்மண்ணே உண்ணுர் என்று சொன்னவற்ருலே அந்த நாட்டில் பகை இல்லை, போர் இல்லை என்ற செய்தியைத் தெரிவித்தார். இன்னவை உண்டு என்னும் முறையில் சொல்லும் செய்திகளால் அந்த காட்டில் சோறு நிறைய உண்டென்றும், மேகம் மழை பொழியும் என்றும், உழுதற்குெழில் சிறக்குமென்றும், மகளிர் இன்ப வாழ்விலே சிறந்துமனே வாழ்க்கைக்கு மங்கலமாகிய நன்மக்கட் பேற்றை உடையவர்களாவார்களென்றும் புலப்படுத்தி அந்த நாட்டில் உளதாகிய வளப்பத்தையும் விளக்குகிறர்.

ஒரு மன்னனைப் பகைத்தவர் அழிதலேயும், சார்ந்தவர் வாழ்தலையும் “நீ உடன்று நோக்கும் வாய் எரிதவழ, நீ நயந்து நோக்கும் வாய் பொன்பூப்ப” என்று அழகு பெறக் கூறுகிருர் ஆவூர் மூலங்கிழார். அவர் சோழனுடைய பேராற்றலை, செஞ்ஞாயிற்று நிலவு வேண்டினும், வெண்டிங்களுள் வெயில் வேண்டினும், வேண்டியது விளைக்கும் ஆற்றலை " என்று சொல்வர்.

இவ்வாறு தம் கருத்தைப் பல முறையில், இனிமையும் அழகும் பயப்பக் கூறும் புலவர்களின், கவித்திறமை, அறிந்தறிந்து சுவைத்துச் சுவைத்து மகிழ்வதற்குரியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/15&oldid=1267390" இருந்து மீள்விக்கப்பட்டது