அறப்போர்
படுத்தும் மன்னனை, ‘பிறர்மண் உண்ணும் செம்மல்’ என விளிப்பர் ஒரு நல்லிசைச் சான்றேர். ஒரு வள்ளல் கொடுக்கும் கொடை நிச்சயமாகத் தமக்குக் கிடைக்கும் என்பதை, அது 'யானை கோட்டிடை வைத்த கவளம் போன்றது என்று உவமை கூறி உணர்த்துவார். ஒருவரை வாழ்த்தும்போது ஆற்று மணலினும் பலகாலம் வாழ்வாயாக என்று வாழ்த்துவது புலவர் மரபு.
சுவையும் நயமும் அமையப் புலவர்கள் அழகிய பாடல்களைப் பாடியிருக்கிருர்கள். சங்கப் பாடல்களில் சில சொற்களால் பல செய்திகளைச் சொல்லும் முறையைக் காணலாம். கொன்றை மலர் கார் காலத்திலே மலர்வது என்பதை, 'கார் நறுங்கொன்றை' என்று சுருக்கமாகத்தெரிவிக்கிறார் ஒரு புலவர். புதல்வர் இம்மைக்கும் மறுமைக்கும் எய்ப்பில் வைப்பாகப் பயன்படுவர் என்பதை, ‘பொன்போற் புதல்வர்’ என்ற தொடரால் ஒருவர் விளங்க வைக்கிறார், ஒரு மன்னனுடைய ஆட்சி மிகச் சிறப்பாக அறநெறி வழாமல் நடை பெற்றது என்பதை, ‘அறந்துஞ்சும் செங்கோலேயே’ என்று சில சொற்களால் தெளிவுபடுத்துகிறார் குறுங்கோழியூர் கிழார். ஒரு மன்னனுடைய நாட்டிலே பிறந்து அவனுடைய கல்லாட்சியிலே என்றும் இன்பவாழ்வைப்பெறும் சிறப்பை, ‘நின்னிழற் பிறந்து நின் கிழல்வளர்ந்த எம்’ என்பதில் அழகுபடப் புனைகிறார் சான்றோர்.
தமக்குப் பரிசில் வேண்டும் என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்க விரும்பவில்லை பேய் மகள் இளஎயினியார். அந்தக் கருத்தைக் குறிப்பாகத் தெரிவிக்கிறார். அரசன் பகைவருடைய புறத்தைப் பெற்றான், மறம் பாடிய பாடினி இழையைப் பெற்றாள். பாண்மகனே பொற்றாமரை பெற்றான் என்று கூறி நிறுத்துகிறார், இத்தனையும் பாடிய நான் என்ன பெறப்போகிறேன்? என்ற கேள்வி தானே இந்தப் பாட்டின் முடிவிலே தொனிக்கிறது.